பைடன், ஒபாமாவின் கூட்டாட்சி கொள்கையே விமான விபத்துக்கு காரணம்; பழி சுமத்தினார் டிரம்ப்!
பைடன், ஒபாமாவின் கூட்டாட்சி கொள்கையே விமான விபத்துக்கு காரணம்; பழி சுமத்தினார் டிரம்ப்!
ADDED : ஜன 31, 2025 07:18 AM

வாஷிங்டன்: அமெரிக்காவில் நடந்த பயங்கர விமான விபத்திற்கு, பைடன், ஒபாமாவின் கூட்டாட்சியே காரணம் என அமெரிக்கா அதிபர் டொனால்டு டிரம்ப் குற்றம் சாட்டியுள்ளார்.
அமெரிக்காவின் வாஷிங்டனில் தரையிறங்க முயன்ற பயணியர் விமானமும், பயிற்சியில் ஈடுபட்டிருந்த ராணுவ ஹெலிகாப்டரும் நடுவானில் மோதி விபத்துக்குள்ளாகின. இதில், விமானத்தில் பயணித்த 64 பேரும், ஹெலிகாப்டரில் பயணித்த மூன்று வீரர்களும் பலியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. உடனடியாக விமான நிலையத்தில் விமான சேவைகள் நிறுத்தப்பட்டன. தற்போது வரை 40 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக வாஷிங்டனில் செய்தியாளர்கள் சந்திப்பில், டொனால்டு டிரம்ப் கூறியதாவது:
விமான விபத்திற்கு, பைடன், ஒபாமாவின் கூட்டாட்சி பன்முகத்தன்மை கொள்கைகள் காரணம். விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது. இதன் பின்னணியைக் கண்டறியும் வரை ஓயமாட்டேன். விமான போக்குவரத்து துறையில் பணியாற்றுவோர் அதிகபட்ச தரத்துடனும், அறிவுடனும் இருக்க வேண்டியது அவசியம். மாற்றுத்திறனாளிகள், உளவியல் பிரச்னைகள் உள்ளவர்களை பணியமர்த்தி உள்ளனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.