போரை நிறுத்த புடினுக்கு டிரம்ப் அழுத்தம் கொடுக்க முடியும்; ஜெலன்ஸ்கி நம்பிக்கை
போரை நிறுத்த புடினுக்கு டிரம்ப் அழுத்தம் கொடுக்க முடியும்; ஜெலன்ஸ்கி நம்பிக்கை
ADDED : பிப் 15, 2025 07:20 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கீவ்: போரை நிறுத்த ரஷ்ய அதிபருக்கு, டிரம்ப் அழுத்தம் கொடுக்க முடியும் என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்தார்.
ரஷ்யா- உக்ரைன் இடையிலான போர் 3வது ஆண்டை நெருங்கி வரும் நிலையில், அமைதியை நிலைநாட்ட டிரம்ப் முயற்சி செய்து வருகிறார். உக்ரைன்-ரஷ்யா ஆகிய இரு நாடுகளுக்கும் இடையிலான போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான பேச்சுவார்த்தையை துவங்க, ரஷ்ய அதிபர் புடினுடன் அமெரிக்கா அதிபர் டிரம்ப் தொலைபேசியில் பேசியிருந்தார்.
இது குறித்து நடந்த மியூனிக் மாநாட்டில், ஜெலன்ஸ்கி பேசியதாவது: ரஷ்ய அதிபரை நேருக்கு நேர் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். அமெரிக்கா அதிபர் டொனால்டு டிரம்ப் ஒரு வலிமையான தலைவர். போரை நிறுத்த ரஷ்ய அதிபருக்கு, டிரம்ப் அழுத்தம் கொடுக்க முடியும். அவரால் அதை செய்ய முடியும். இவ்வாறு அவர் பேசினார்.