sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், மார்ச் 03, 2026 ,மாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

 விமர்சித்ததால் கடுப்பான டிரம்ப் கனடாவுக்கான அழைப்பு ரத்து

/

 விமர்சித்ததால் கடுப்பான டிரம்ப் கனடாவுக்கான அழைப்பு ரத்து

 விமர்சித்ததால் கடுப்பான டிரம்ப் கனடாவுக்கான அழைப்பு ரத்து

 விமர்சித்ததால் கடுப்பான டிரம்ப் கனடாவுக்கான அழைப்பு ரத்து

1


ADDED : ஜன 24, 2026 05:41 AM

Google News

ADDED : ஜன 24, 2026 05:41 AM

1


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நியூயார்க்: வட அ மெரிக்க நாடான கனடாவின் பிரதமர் மார்க் கார்னி, ஐரோப்பிய நாடான சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் நடந்த உலகப் பொருளாதார மன்றத்தில் பேசுகையில், 'ராணுவ பலம், பொருளாதார பலமுடைய நாடுகள், அவற்றை ம ற்ற நாடுகளுக்கு எதிராக பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும்' என்றார்.

அதே கூட்டத்தில், இதற்கு பதிலளித்த அமெரிக்க அதிபர் டிரம்ப், 'அமெரிக்காவால் தான் கனடா வாழ்கிறது, எங்களிடமிருந்து பல சலுகைகளை பெறும் அந்நாடு, நன்றியுடன் இல்லை' என விமர்சித்தார். இதற்கு கனடா பிரதமர் மார்க் கார்னி, 'அமெரிக்காவின் தயவால் நாங்கள் வாழவில்லை' என்றார்.

இதனால் அதிருப்தி அடைந்த டிரம்ப், சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், 'கனடா பிரதமர் கார்னிக்கு அமைதி வாரியத்தில் இணைய விடுத்த அழைப்பை ரத்து செய்கிறேன். இந்த வாரியம் எப்போதும் இல்லாத அளவுக்கு மதிப்புமிக்க தலைவர்கள் கொண்ட குழுவாக இருக்கும்' என குறிப்பிட்டுள்ளார்.

மேற்காசிய நாடான இஸ்ரேல்- - ஹமாஸ் போரை முடிவுக்கு கொண்டு வர, காசாவுக்கான ஒரு அமைதி வாரியத்தை டிரம்ப் உருவாக்கியுள்ளார். இதில், இதுவரை 30க்கும் மேற்பட்ட நாடுகள் இணைந்துள்ளன.






      Dinamalar
      Follow us