ஆசியான் மாநாட்டில் பங்கேற்க புறப்பட்டார் டிரம்ப்: கோலாலம்பூரில் மலேசிய எதிர்க்கட்சி போராட்டம்
ஆசியான் மாநாட்டில் பங்கேற்க புறப்பட்டார் டிரம்ப்: கோலாலம்பூரில் மலேசிய எதிர்க்கட்சி போராட்டம்
ADDED : அக் 25, 2025 01:11 PM

கோலாலம்பூர்; ஆசியான் உச்சி மாநாட்டில் பங்கேற்க அமெரிக்க அதிபர் டிரம்ப் மலேசியாவுக்கு புறப்பட்டார். அவரின் வருகையை எதிர்த்து, கோலாலம்பூரில் உள்ள அமெரிக்க தூதரகம் முன்பு, மலேசிய இஸ்லாமிய கட்சியினர் போராட்டம் நடத்தினர்.
மலேசியாவில் அக்.26ம் தேதி முதல் அக்.28ம் தேதி வரை 3 நாட்கள் தென்கிழக்கு ஆசிய நாடுகளான ஆசியான் கூட்டமைப்பின் உச்சி மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் அமெரிக்க அதிபர் டிரம்ப், பிரேசில் அதிபர் டிசில்வா உள்ளிட்ட பல நாடுகளின் முக்கிய தலைவர்கள் கலந்து கொள்கின்றனர். இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர் உள்ளிட்ட உறுப்பு நாடுகளும் மாநாட்டில் பங்கேற்கின்றன.
மாநாட்டில் கலந்து கொள்வதற்காக அமெரிக்க அதிபர் டிரம்ப் மலேசியா புறப்பட்டார். ஜப்பான் மற்றும் தென்கொரியாவுக்கும் அவர் பயணிக்க உள்ளார். அதிபராக பதவியேற்ற பிறகு., முதல் முறையாக மலேசியா, ஜப்பான் மற்றும் தென் கொரியாவுக்கு செல்கிறார். தமது 5 நாள் பயணத்தின் கடைசி நாளில் அவர் சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்திக்க இருக்கிறார்.
இதனிடையே டிரம்பின் மலேசிய பயணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கோலாலம்பூரில் உள்ள அமெரிக்க தூதரகம் முன்பு மலேசியாவின் முக்கிய எதிர்க்கட்சியான மலேசிய இஸ்லாமிய கட்சியினர் திரண்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அவர்கள், காசா விவகாரத்தில் டிரம்பின் நிலைப்பாட்டைக் கண்டித்து முழக்கமிட்டனர்.

