தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/உலகம்/ஈரானுடனான பிரச்னைக்கு உண்மையான தீர்வு: பேச துணை அதிபரை அனுப்புவேன் என டிரம்ப் சூசகம்

ஈரானுடனான பிரச்னைக்கு உண்மையான தீர்வு: பேச துணை அதிபரை அனுப்புவேன் என டிரம்ப் சூசகம்

ஈரானுடனான பிரச்னைக்கு உண்மையான தீர்வு: பேச துணை அதிபரை அனுப்புவேன் என டிரம்ப் சூசகம்


UPDATED : ஜூன் 17, 2025 07:56 PM

ADDED : ஜூன் 17, 2025 05:15 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 17, 2025 07:56 PM ADDED : ஜூன் 17, 2025 05:15 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வாஷிங்டன்: ஈரானுடனான அணுசக்தி பிரச்னைக்கு உண்மையான தீர்வு காண விரும்புகிறேன் என அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.

கனடாவில் நடந்த ஜி7 மாநாட்டை முடித்துக் கொண்டு முன்னதாகவே அமெரிக்கா கிளம்பிய டிரம்ப் விமானத்தில் நிருபர்களிடம் கூறியதாவது: ஈரான் மீதான தாக்குதலை, இஸ்ரேல் எளிதில் கைவிடாது. ஈரானிடம் அணு ஆயுதம் இருக்கக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறேன்.

அந்நாட்டுடன் அணுசக்தி தொடர்பான பிரச்னைக்கு உண்மையான தீர்வு எட்டப்படுவதை விரும்புகிறேன். இது தொடர்பாக ஈரான் அதிகாரிகளுடன் ஆலோசிக்க துணை அதிபர் வான்ஸ் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுக்கான சிறப்பு தூதர் ஸ்டீவ் விட்காப்பை தேவைப்பட்டால் அனுப்புவேன். என்ன நடக்கிறது என்பதை பொறுத்து இது அமையும். இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us