அக்டோபரில் தென்கொரியா செல்லும் டிரம்ப்: ஜின்பிங்கை சந்தித்து பேச திட்டம்
அக்டோபரில் தென்கொரியா செல்லும் டிரம்ப்: ஜின்பிங்கை சந்தித்து பேச திட்டம்
ADDED : செப் 07, 2025 08:10 AM

வாஷிங்டன்: அக்டோபரில் தென்கொரியாவுக்குச் செல்லும் அமெரிக்க அதிபர் டிரம்ப், சீன அதிபர் ஜி ஜிங்பிங்கை சந்திக்க உள்ளார் என்று சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
தென்கொரியாவில் கியோங்ஜிங்கில் ஆசிய பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு உச்சி மாநாடு அக்டோபரில் தொடங்கி நவம்பர் தொடக்கம் வரை நடைபெறுகிறது. இந்த மாநாட்டுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப், அவரின் ஆலோசகர்கள் செல்ல இருக்கின்றனர். இதில் வர்த்தக அமைச்சர்களுடான சந்திப்பும் நடக்க உள்ளது.
தென் கொரிய பயணத்தின் போது, சீன அதிபர் ஜி ஜின்பிங்கை அதிபர் டிரம்பை சந்திக்க இருப்பதாகவும், அப்போது இருநாடுகளின் பொருளாதார ஒத்துழைப்பு விவகாரங்கள், சர்வதேச பிரச்னைகள், பாதுகாப்பு உள்ளிட்டவை குறித்து பேசப்படும் என்று சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஜி ஜின்பிங்குடன் இருதரப்பு நாடுகளின் கூட்டம் நடத்துவதற்காக டிரம்ப் ஆலோசனைகளை மேற்கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக, டிரம்பையும், அவரது மனைவியையும் ஜி ஜின்பிங் சீனா வருமாறு தொலைபேசி வழியே அழைப்பு விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.