பைடனை சந்தித்தார் டிரம்ப்: ஓவல் அலுவலகத்தில் விருந்து
பைடனை சந்தித்தார் டிரம்ப்: ஓவல் அலுவலகத்தில் விருந்து
UPDATED : நவ 13, 2024 10:36 PM
ADDED : நவ 13, 2024 10:30 PM

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற டொனால்டு டிரம்ப், அதிபர் பைடனை சந்தித்து பேசினார்.
இந்த சந்திப்பு வெள்ளை மாளிகையில் உள்ள ஓவல் அலுவலகத்தில் நடந்தது. பைடன், டிரம்புக்கு விருந்து அளித்து கவுரவித்தார்.
ஓவல் அலுவலகம் வந்த டிரம்ப்பை வரவேற்று பேசிய ஜோ பைடன், அதிகார மாற்றம் சுமூகமாகவும் அமைதியான முறையிலும் நடப்பது உறுதி செய்யப்படும் எனவும், அது குறித்து அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்படும் என உறுதியளித்தார்.
அதற்கு பதிலளித்த டிரம்ப் அது எவ்வளவு சீராக முடியுமோ அவ்வளவு சீராக இருக்கும் என்றார்.
சந்திப்பு குறித்து வெள்ளை மாளிகை வட்டாரங்கள் கூறியதாவது: டிரம்ப், பைடனின் தேர்தலுக்கு பிந்தைய சந்திப்பு வெளியேறும் அதிபருக்கும், புதிதாக வரவிருக்கும் அதிபருக்கும் இடையே நடக்கும் வழக்கமான நடவடிக்கை. அமெரிக்காவின் ஜனநாயகத்தின் கீழ் அமைதியான அதிகாரப் பரிமாற்றத்தின் தொடக்கமாக குறிப்பிடப்படுகிறது.இவ்வாறு வெள்ளை மாளிகை வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.
2020 ல் நடந்த அதிபர் தேர்தலில் பைடன் வெற்றி பெற்ற போது, அதனை டிரம்ப் ஏற்கவில்லை. தேர்தல் முறையாக நடைபெறவில்லை என்று டிரம்ப் ஆதரவாளர்கள் போராட்டம் நடத்தினர். அப்போது வெள்ளை மாளிகையில் இருந்து டிரம்ப் வெளியேறினார். நான்கு ஆண்டுகளுக்கு பிறகு முதல்முறையாக வெள்ளை மாளிகைக்கு டிரம்ப் வந்துள்ளார்.