sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, ஏப்ரல் 05, 2026 ,பங்குனி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

கமேனியை கொன்றதற்கு உரிய விலை கொடுக்க நேரிடும்: டிரம்புக்கு ஈரான் மிரட்டல்

/

கமேனியை கொன்றதற்கு உரிய விலை கொடுக்க நேரிடும்: டிரம்புக்கு ஈரான் மிரட்டல்

கமேனியை கொன்றதற்கு உரிய விலை கொடுக்க நேரிடும்: டிரம்புக்கு ஈரான் மிரட்டல்

கமேனியை கொன்றதற்கு உரிய விலை கொடுக்க நேரிடும்: டிரம்புக்கு ஈரான் மிரட்டல்

6


ADDED : மார் 08, 2026 03:53 PM

Google News

6

ADDED : மார் 08, 2026 03:53 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

டெஹ்ரான்; கமேனியின் இழப்புக்கு பதிலடி தரும் வகையில், உரிய விலையை கொடுக்க நேரிடும் என்று அமெரிக்க அதிபர் டிரம்புக்கு ஈரான் உயர்பாதுகாப்பு அதிகாரி அலி லாரிஜனி மிரட்டல் விடுத்துள்ளார்.

சரண் அடைந்தால் மட்டுமே சண்டையை நிறுத்துவோம் என்று ஈரானுக்கு அதிபர் டிரம்ப் கூறி நாட்கள் கடந்துவிட்டன. அமெரிக்காவின் நிலைப்பாட்டை கவனியாமல் ஈரான் தொடர்ந்து அமெரிக்கா, இஸ்ரேல் தாக்குதல்களை எதிர்கொண்டு வருகிறது. தற்போதைய சண்டையை தங்களால் 6 மாதங்களுக்கு தீவிரமாக நடத்த முடியும் என்று ஈரானின் புரட்சிகர காவல்படை ஏற்கனவே அறிவித்துவிட்டது.

இந் நிலையில், கமேனியின் இழப்புக்கு பதிலடி தரும் வகையில் உரிய விலையை டிரம்ப் கொடுக்க நேரிடும் என்று ஈரான் மிரட்டில் விடுத்துள்ளது. இந்த மிரட்டலை ஈரானின் உயர் பாதுகாப்பு அதிகாரியும், கமேனியின் மூத்த ஆலோசகராகவுமான அலி லாரிஜனி விடுத்து உள்ளார். அந்நாட்டின் அரசு தொலைக்காட்சியில் அவர் உரையாற்றுகையில் இவ்வாறு கூறி இருக்கிறார்.

அவர் மேலும் கூறியதாவது;

எங்களின் எதிர்வினையை டிரம்ப் தவறாக மதிப்பிட்டுவிட்டார். இந்த மோதல் விரைவாக முடிவடையாது. வெனிசுலாவில் செய்ததை இங்கேயும் செய்ய முடியும் என்று டிரம்ப் எண்ணுகிறார். இப்போது அவர் மாட்டிக் கொண்டு இருக்கிறார்.

நாங்கள் அவரை விட மாட்டோம். அவர் செய்த செயலுக்கு உரிய விலை கொடுக்க வேண்டும். எங்களின் தலைவரை(கமேனி) கொன்றுள்ளார். 1000க்கும் மேற்பட்டோரையும் கொன்றுள்ளார். இது ஒரு எளிதான விஷயம் அல்ல.

இவ்வாறு அலி லாரிஜனி கூறி உள்ளார். இதே மிரட்டலை அவர் தமது எக்ஸ் வலைதள பதிவிலும் வெளியிட்டுள்ளார். அலி லாரிஜனியின் மிரட்டல் குறித்து பதிலளித்துள்ள டிரம்ப், அவர் என்ன பேசுகிறார்., யார் அவர் என்று எனக்கு தெரியவில்லை, அதுகுறித்து நான் கவலைப்பட போவதும் இல்லை என்றார்.






      Dinamalar
      Follow us