தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/உலகம்/வெனிசுலா வான்வெளியில் இனி எந்த விமானமும் பறக்கக்கூடாது: தடை விதித்தார் டிரம்ப்

வெனிசுலா வான்வெளியில் இனி எந்த விமானமும் பறக்கக்கூடாது: தடை விதித்தார் டிரம்ப்

வெனிசுலா வான்வெளியில் இனி எந்த விமானமும் பறக்கக்கூடாது: தடை விதித்தார் டிரம்ப்


ADDED : நவ 29, 2025 07:45 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 29, 2025 07:45 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வாஷிங்டன்: வெனிசுலாவின் வான்வெளியை விமான நிறுவனங்கள் பயன்படுத்தக்கூடாது என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தடை விதித்துள்ளார்.

அமெரிக்காவில் போதை பொருள் அதிகளவு புழங்குவதற்கு வெனிசுலா தான் காரணம் என்பது டிரம்பின் குற்றச்சாட்டு. அவரின் குற்றச்சாட்டை வெனிசுலா மறுத்துவிட்ட போதிலும், கரீபியன் கடல்பகுதியில் போர்க்கப்பல்கள், போர் விமானங்களை அமெரிக்கா குவித்து வருகிறது.

வெனிசுலாவுக்கு எதிராக ராணுவ நடவடிக்கைகள் எடுப்பது குறித்து டிரம்பிடம் ராணுவ அதிகாரிகள் ஆலோசனை நடத்தி இருந்தனர். இந்நிலையில், 'வெனிசுலா நாட்டு வான்வெளி மற்றும் அதை சுற்றியுள்ள வான்வெளி மூடப்படுகிறது. அங்கே எந்த விமானமும் பறக்கக் கூடாது என்று டிரம்ப் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தமது எக்ஸ் வலைதள பதிவில் குறிப்பிட்டு உள்ளதாவது;

விமான நிறுவனங்கள், விமானிகள், போதை கடத்தல்காரர்கள் அனைவரும் வெனிசுலாவிற்கு மேலே உள்ள வான்வெளி மற்றும் அதைச் சுற்றியுள்ள வான்வெளி முழுவதுமாக மூடப்பட்டிருப்பதைக் கருத்தில் கொள்ளவும்.

இவ்வாறு டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

டிரம்பின் இந்த புதிய அறிவிப்பு குறித்து வெனிசுலா தரப்பில் இருந்து எவ்வித எதிர் கருத்துகளும் வெளியாகவில்லை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us