என்னிடம் ஏதும் கேட்டதில்லை; எலான் மஸ்கிற்கு டிரம்ப் பாராட்டு
என்னிடம் ஏதும் கேட்டதில்லை; எலான் மஸ்கிற்கு டிரம்ப் பாராட்டு
UPDATED : மார் 25, 2025 08:41 AM
ADDED : மார் 25, 2025 07:20 AM

வாஷிங்டன்: 'எலான் மஸ்க் ஒரு தேச பக்தர். அவர் என்னிடம் ஏதும் கேட்டதில்லை' என அமெரிக்கா அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.
வாஷிங்டனில் டெஸ்லா சி.இ.ஓ., எலான் மஸ்க் கலந்து கொண்ட அமைச்சரவை கூட்டத்தில், டிரம்ப் பேசியதாவது: எலான் மஸ்க் உங்களுக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன். அவர் ஒரு தேச பக்தர். அவர் என்னுடைய நண்பர் ஆகிவிட்டார். அவர் ஒரு போதும் என்னிடம் எதுவும் கேட்டதில்லை. அவர் கேட்டிருக்கலாம்.
அவர் எப்போதாவது என்னிடம் ஏதாவது கேட்பாரா என்று நான் எப்போதும் யோசிக்கிறேன். ஆனால் அவர் ஒருபோதும் என்னிடம் எதுவும் கே ட்டதில்லை. எலான் மஸ்க் என்னிடம் ஏதாவது கேட்டால் மக்களுக்கு தெரியப்படுத்துவேன். நான் மின்சார கார் ஆணையை நீக்கிவிட்டேன்.
அது அவரை எவ்வாறு பாதிக்கிறது என்பது எனக்கு தெரியாது. அவர் இதுவரை என்னிடம் எதுவும் கேட்கவில்லை. அது ஒரு அற்புதமான பண்பு என்று நான் நினைக்கிறேன். டெஸ்லா வாகனங்களுக்கு தீ வைப்பவர்கள் மற்றும் டெஸ்லா சொத்துக்களை சேதப் படுத்துபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததற்காக அட்டர்னி ஜெனரல் நன்றி.
குற்றவாளிகளை கண்டுபிடிக்கும்போது அவர்கள் பயங்கரவாதிகள் என்பதால் அவர்கள் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும். அவர்களுக்கு நிதியுதவி செய்பவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.