sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 29, 2026 ,பங்குனி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

விரைவில் கிரீன்லாந்தை வாங்குவதற்கான ஒப்பந்தம் முடிவாகும்; அமெரிக்க அதிபர் டிரம்ப்

/

விரைவில் கிரீன்லாந்தை வாங்குவதற்கான ஒப்பந்தம் முடிவாகும்; அமெரிக்க அதிபர் டிரம்ப்

விரைவில் கிரீன்லாந்தை வாங்குவதற்கான ஒப்பந்தம் முடிவாகும்; அமெரிக்க அதிபர் டிரம்ப்

விரைவில் கிரீன்லாந்தை வாங்குவதற்கான ஒப்பந்தம் முடிவாகும்; அமெரிக்க அதிபர் டிரம்ப்

3


ADDED : பிப் 01, 2026 10:25 PM

Google News

3

ADDED : பிப் 01, 2026 10:25 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வாஷிங்டன்: கிரீன்லாந்தை வாங்குவதற்கான ஒப்பந்தம் விரைவில் எட்டப்படும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.பாதுகாப்பு காரணங்களைக் காண்பித்து, ஐரோப்பிய நாடான டென்மார்க்கின் சுயாட்சி பிராந்தியமான கிரீன்லாந்தை கைப்பற்ற அமெரிக்க அதிபர் டிரம்ப் துடியாய் துடித்து வருகிறார். இதற்கு பிற ஐரோப்பிய நாடுகள் எதிர்ப்பு தெரிவித்ததுடன், கிரீன்லாந்தின் பாதுகாப்பிற்காக ராணுவத்தையும் அனுப்பி வைத்துள்ளன. இதனால், கடுப்பான டிரம்ப், 8 ஐரோப்பிய நாடுகளுக்கு கூடுதல் வரியை விதிக்கப்போவதாக மிரட்டல் விடுத்தார்.

அமெரிக்காவின் இந்த எச்சரிக்கைக்கு ஐரோப்பிய நாடுகள் அடிபணியாத நிலையில், கிரீன்லாந்தை வாங்குவது தொடர்பாக டென்மார்க்குடனான ஒப்பந்தம் நெருங்கி விட்டதாக அதிபர் டிரம்ப்பின் கடந்த வாரம் கூறியிருந்தார்.

இந்த நிலையில், கிரீன்லாந்தை வாங்குவதற்கான பேச்சு நடைபெற்று வருவதாகவும், விரைவில் ஒப்பந்தம் எட்டப்படும் என்றும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இன்று மீண்டும் தெரிவித்துள்ளார்.

ஏர் போர்ஸ் ஒன் விமானத்தில் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது; நாங்கள் பேச்சுவார்த்தையைத் தொடங்கிவிட்டோம். கிட்டத்தட்ட ஒப்பந்தம் எட்டப்போவதாகவே நான் நினைக்கிறேன். இது அனைவருக்கும் சிறப்பான ஒப்பந்தமாக இருக்கும். குறிப்பாக தேசிய பாதுகாப்புக்கு இது மிகவும் முக்கியமான ஒப்பந்தம், இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us