சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்திப்பேன்: அவர் ஒரு ஜென்டில்மேன் என்கிறார் டிரம்ப்
சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்திப்பேன்: அவர் ஒரு ஜென்டில்மேன் என்கிறார் டிரம்ப்
ADDED : அக் 02, 2025 07:18 AM

வாஷிங்டன்: 4 வாரங்களில் சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்திப்பேன் என அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். இது குறித்து நிருபர்களிடம், ''சீன அதிபர் ஒரு ஜென்டில்மேன். எங்களுக்கு அவர்களுடன் ஒரு நல்ல உறவு உள்ளது'' என டிரம்ப் தெரிவித்தார்.
இது குறித்து சமூக வலைதளத்தில் அதிபர் டிரம்ப் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவ: சீனா பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று விரும்புவதால், நமது நாட்டின் சோயாபீன்ஸ்யை வாங்காததால், விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். அதே நேரத்தில், வரி விதிப்பு மூலம் நாம் நிறைய பணத்தை சம்பாதித்துள்ளோம். அந்த பணத்தின் ஒரு சிறிய பகுதிகளை எடுத்து நமது விவசாயிகளுக்கு உதவ போகிறோம்.
நான் ஒருபோதும் நமது விவசாயிகளுக்கு பாதிப்பு உருவாக சம்மதிக்க மாட்டேன். அதிபராக இருந்த போது தூக்கத்தில் இருந்த ஜோ பைடன் சீனா உடன் எந்த ஒப்பந்தத்தையும் ஏற்படுத்தவில்லை. நான் நமது தேசபக்தர்களையும், விவசாயிகளையும் நேசிக்கிறேன். நான் 4 வாரங்களில் சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்திப்பேன். அவருடன் பேசும் போது சோயாபீன்ஸ் ஒரு முக்கிய விவாத பொருளாக இருக்கும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
ஜென்டில்மேன்
இது தொடர்பாக வெள்ளை மாளிகையில் நிருபர்களிடம் அதிபர் டிரம்ப் கூறியதாவது: சீன அதிபர் ஜி ஜின்பிங் உடன் எனக்கு நல்ல தொடர்பு இருந்தது. அவர் டிக்டாக் செயலி தொடர்பான ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளித்தார். என்னால் சீனாவுடன் ஒரு ஒப்பந்தத்தை உருவாக்க முடிந்தது. இது எங்களுக்கு மிகவும் நல்ல ஒப்பந்தமாக இருக்கும் என்று நான் நம்புகிறேன். அதிபர் ஜி ஜின்பிங்கிற்கு நன்றி சொல்ல விரும்புகிறேன். அவர் ஒரு ஜென்டில்மேன். எங்களுக்கு அவர்களுடன் ஒரு நல்ல உறவு உள்ளது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.