சட்டவிரோத குடியேற்றத்தை தடுப்பதே முதல் நோக்கம்; டிரம்ப் திட்டவட்டம்
சட்டவிரோத குடியேற்றத்தை தடுப்பதே முதல் நோக்கம்; டிரம்ப் திட்டவட்டம்
ADDED : மார் 03, 2025 11:44 AM

வாஷிங்டன்: சட்டவிரோத குடியேற்றத்தை தடுப்பதே முதல் நோக்கம் என அமெரிக்கா அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.
உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதலை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் நடந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. டிரம்ப் - ஜெலன்ஸ்கி இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனையடுத்து ஜெலன்ஸ்கியை வெள்ளை மாளிகையில் இருந்து வெளியேறும்படி டிரம்ப் உத்தரவிட்டார். தற்போது உக்ரைனுக்கு ஐரோப்பிய நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன.
இந்நிலையில் இன்று அதிபர் டொனால்டு டிரம்ப் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: புடினைப் பற்றி கவலைப்படுவதைக் குறைத்து, சட்டவிரோத குடியேற்றங்கள், வன்கொடுமை சம்பவங்கள், போதைப்பொருள் மற்றும் கொலைகாரர்கள் நம் நாட்டிற்குள் நுழைவதைப் பற்றி அதிக நேரம் கவலைப்பட வேண்டும்.
சட்டவிரோத குடியேற்றத்தை தடுப்பதே முதல் நோக்கம். இவ்வாறு டொனால்டு டிரம்ப் கூறியுள்ளார்.
மற்றொரு பதிவில் டிரம்ப் கூறியதாவது: நான் பதவியேற்ற முதல் ஒரு மாதத்திற்குள் சட்டவிரோத குடியேறிகளின் எண்ணிக்கையை வரலாற்றுச் சிறப்புமிக்க அளவிற்குக் குறைக்க முடிந்தது.
நமது நாட்டின் மீதான படையெடுப்பு முடிந்துவிட்டது. அமெரிக்க - மெக்சிகோ எல்லையில் எல்லை ரோந்துப் படையினரால் 8,326 சட்டவிரோத குடியேறிகள் மீது மட்டுமே வழக்குத் தொடரப்பட்டது. அவர்கள் அனைவரும் விரைவாக நம் நாட்டிலிருந்து வெளியேற்றப்பட்டனர். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.