புடினுடன் பேசி என் நேரத்தை வீணாக்க விரும்பவில்லை; டிரம்ப் திட்டவட்டம்
புடினுடன் பேசி என் நேரத்தை வீணாக்க விரும்பவில்லை; டிரம்ப் திட்டவட்டம்
ADDED : அக் 26, 2025 08:03 AM

வாஷிங்டன்: ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுடன் பேசி என் நேரத்தை நான் வீணாக்க விரும்பவில்லை என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறி உள்ளார்.
உக்ரைன், ரஷ்ய நாடுகளின் போர் முற்று பெறுவதாக தெரியவில்லை. போரை முடிவுக்குக் கொண்டு வர எதிர்ப்பதாக ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் தெரிவித்து இருந்தார்.
நேற்று இரவும் கூட உக்ரைன் மீது ரஷ்ய ஏவுகணைகளை வீசி கடும் தாக்குதல் நடத்தியது. இதில் 4 பேர் கொல்லப்பட்டனர், 20 பேர் படுகாயம் அடைந்தனர். போரை நிறுத்த அமெரிக்க அதிபர் டிரம்ப் மேற்கொண்ட முயற்சிகள் எதுவும் பலனளிக்கவில்லை.
இந் நிலையில் புடினுடன் பேசி என் நேரத்தை நான் வீணாக்க விரும்பவில்லை என்று டிரம்ப் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் கூறியதாவது;
அமைதி ஒப்பந்தம் ஏற்படும் என்ற எண்ணம் புடினுக்கு இருக்க வேண்டும். அப்படி இல்லாத பட்சத்தில் அவருடன் பேசி என் நேரத்தை வீணாக்க விரும்பவில்லை. அவருடன்(புடின்) என்றுமே மிக சிறந்த உறவு உண்டு. ஆனால் இப்போது மிகவும் ஏமாற்றம் அளிக்கிறது.
இவ்வாறு டிரம்ப் கூறினார்.
முன்னதாக, புடாபெஸ்டில் புடினை,டிரம்ப் சந்திப்பார். போர் நிறுத்தம் பற்றி மத்தியஸ்த பேச்சுவார்த்தை நடத்துவார் என்று அறிவிக்கப்பட்டது, குறிப்பிடத்தக்கது.

