அவங்க யாரும் நமக்கு வேண்டியவங்க இல்லை; சிரியா மோதலில் தலையிடக்கூடாது என டிரம்ப் உத்தரவு
அவங்க யாரும் நமக்கு வேண்டியவங்க இல்லை; சிரியா மோதலில் தலையிடக்கூடாது என டிரம்ப் உத்தரவு
ADDED : டிச 08, 2024 06:57 AM

வாஷிங்டன்: 'சிரியாவில் நடந்து வரும் மோதலில் அமெரிக்கா தலையிடக்கூடாது' என அமெரிக்கா அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள டொனால்டு டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.
மத்திய கிழக்கு நாடான சிரியாவில், கடந்த 2011- முதல் உள்நாட்டுப் போர் நடந்து வருகிறது. இந்நிலையில், அதிபர் பஷார் அல்- ஆசாத்தை பதவியில் இருந்து அகற்றும் நோக்கில் ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம் என்ற கிளர்ச்சிப் படை தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது. இந்நிலையில், 'சிரியாவில் நடந்து வரும் மோதலில் அமெரிக்கா தலையிடக்கூடாது' என அமெரிக்கா அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள டொனால்டு டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.
அவர் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: சிரியாவில் அதிபரை எதிர்க்கும் போராளிகள், ஒருங்கிணைக்கப்பட்ட தாக்குதலில், பல நகரங்களை முழுவதுமாக கைப்பற்றி விட்டனர். இப்போது டமாஸ்கஸின் புறநகர்ப் பகுதியில், அதிபர் அசாத்தை வெளியேற்றுவதற்கான மிகப் பெரிய நடவடிக்கையை மேற்கொள்ளத் தயாராகி வருகின்றனர். உக்ரைனை ஆக்கிரமித்துள்ள ரஷ்யாவால் சிரியா மோதலை நிறுத்த இயலாது.
சிரியாவில் இருந்து ரஷ்யா வெளியேற்றப்பட வேண்டும். சிரியாவில் ஒரு குழப்பம் நீடிக்கிறது. ஆனால் அவர்கள் யாரும் நமக்கு நண்பர் அல்ல. இது எங்கள் சண்டை அல்ல. அதை விளையாட விடுங்கள். யாரும் தலையிட வேண்டாம். அமெரிக்காவின் தலையீடு இல்லாமல், சிரியாவில் மோதல் நடைபெற வேண்டும். இவ்வாறு டிரம்ப் கூறியுள்ளார்.