கருத்து மோதல் எதிரொலி டிரம்ப் ஆதரவு எம்.பி., ராஜினாமா
கருத்து மோதல் எதிரொலி டிரம்ப் ஆதரவு எம்.பி., ராஜினாமா
ADDED : நவ 23, 2025 01:16 AM

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் தீவிர ஆதரவாளராக இருந்து, எதிர்ப்பு கருத்து தெரிவித்த, எம்.பி.,யான மார்ஜோரி டெய்லர் கிரீன், வரும் ஜனவரியில் தன் பதவியை ராஜினாமா செய்யப் போவதாக அறிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் தீவிர ஆதரவாளர்களில் ஒருவராக நீண்டகாலமாக இருந்தவர், மார்ஜோரி டெய்லர் கிரீன்.
'எச்1 பி விசா' திட்டத்தால் அமெரிக்கர்களின் வேலைவாய்ப்பு பறி போவதாக கூறி, அத்திட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்கான மசோதாவை அமெரிக்க பார்லிமென்டில் கிரீன் கொண்டு வந்தார் .
இதற்கிடையே, சமீபத்தில், எச்1பி விசாவுக்கு ஆதரவாக டிரம்ப் பேசினார்.
குடியரசுக் கட்சியைச் சேர்ந்த எம்.பி.,யான கிரீன், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடுமையாக விமர்சித்தார்.
கருத்து வேறுபாடு தீவிரமான நிலையில், தன் பதவியை வருகிற ஜனவரியில் ராஜினாமா செய்யப்போவதாக கிரீன் நேற்று அறிவித்துள்ளார்.

