மெக்சிகோ எல்லையில் அவசரநிலை பதவியேற்ற உடன் டிரம்ப் அதிரடி
மெக்சிகோ எல்லையில் அவசரநிலை பதவியேற்ற உடன் டிரம்ப் அதிரடி
ADDED : ஜன 21, 2025 10:22 PM
வாஷிங்டன்:அமெரிக்காவின், 47வது அதிபராக குடியரசு கட்சியின், டொனால்டு டிரம்ப், 78, நேற்று பதவியேற்றார்.
பதவியேற்ற பின், அதிபர் டொனால்டு டிரம்ப் ஆற்றிய உரையின் முக்கிய அம்சங்கள்:
அமெரிக்காவின் பொற்காலம் துவங்கி விட்டது. இன்று முதல், நம் நாடு மீண்டும் செழித்து உலகம் முழுதும் மதிக்கப்படும்
அமெரிக்காவை மீண்டும் சிறந்த நாடாக உருவாக்கவே, துப்பாக்கிச் சூட்டில் இருந்து கடவுளால் காப்பாற்றப்பட்டேன்
அமெரிக்க - மெக்சிகோ எல்லையில் அவசரநிலை பிரகடனம்
சட்ட விரோத அகதிகளின் ஊடுருவல் தடுத்து நிறுத்தப்படும்
ஆண் - பெண் என்ற இரு பாலினங்களுக்கு மட்டுமே அங்கீகாரம்
பனாமா கால்வாயில், அமெரிக்க கப்பல்களுக்கு அதிக வரி விதிக்கப்படுகிறது. இதனால், அந்த கால்வாய் அமெரிக்காவோடு மீண்டும் இணைக்கப்படும்; அதை சீனா நிர்வகிக்க தேவையில்லை.
மின் வாகனம் கட்டாயம் என்ற உத்தரவு வாபஸ்; விரும்பிய வாகனங்களை பயன்படுத்தலாம் இஸ்ரேல் - ஹமாஸ் போர் நிறுத்தம் உறுதி செய்யப்படும்
துப்பாக்கி கலாசாரத்துக்கு முடிவு கட்டப்படும்
செவ்வாய் கிரகத்தில் அமெரிக்க கொடி பறக்கும். மெக்சிகோ வளைகுடா இனி, அமெரிக்க வளைகுடா என அழைக்கப்படும்
அமெரிக்க குடிமக்களை வளப்படுத்த வெளிநாடுகளுக்கு வரி விதிக்கப்படும்
அமெரிக்காவில் பேச்சுரிமைக்கான கட்டுப்பாடுகள் நீக்கப்படுகின்றன
சட்டத்துக்கு கட்டுப்படாத குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்
வளர்ந்து வரும் நாடாகவே அமெரிக்காவை கருதுகிறோம்; எல்லைகளை விரிவாக்குவோம்.
ஜோ பைடன் அரசின் தவறான நிர்வாகத்தால் எரிசக்தி விலை கடுமையாக உயர்ந்தது. எனவே எரிசக்தி அவசரநிலை அறிவிக்கப்படுகிறது.
இயற்கை பேரிடர்களை தடுப்பதிலும், எல்லைப் பாதுகாப்பு பிரச்னைகளை தீர்ப்பதிலும் ஜோ பைடன் அரசு தோல்வி அடைந்து விட்டது. கொரோனா தடுப்பூசி போட மறுத்ததற்காக ராணுவத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட வீரர்களை, ஊதியத்துடன் மீண்டும் பணியில் அமர்த்துவேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
மோடி வாழ்த்து
அமெரிக்க அதிபராக பதவியேற்ற டிரம்புக்கு வாழ்த்து தெரிவித்து, பிரதமர் மோடி வெளியிட்ட பதிவில், 'இந்தியா - அமெரிக்காவுக்கு பயனளிக்கும் வகையிலும், உலகிற்கு சிறந்த எதிர் காலத்தை வடிவமைக்கவும் மீண்டும் ஒருமுறை, டிரம்ப் உடன் நெருக்கமாக இணைந்து பணியாற்றுவதை எதிர்நோக்குகிறேன்' என, குறிப்பிட்டுள்ளார். இஸ்ரேல் பிரதமர் நெதன்யதாகு,

