தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/உலகம்/ பகல்நேர சேமிப்பு முறை ரத்து செய்ய டிரம்ப் உறுதி

பகல்நேர சேமிப்பு முறை ரத்து செய்ய டிரம்ப் உறுதி

பகல்நேர சேமிப்பு முறை ரத்து செய்ய டிரம்ப் உறுதி


ADDED : டிச 15, 2024 06:57 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 15, 2024 06:57 AM


Follow on Google
அ நிறம் | அளவு

வாஷிங்டன் : அமெரிக்காவில் கோடை காலத்தின்போது கிடைக்கும் பகல் நேரத்தை பயன்படுத்திக் கொள்ளும் வகையில், 'டேலைட் சேவிங்ஸ் டைம்' எனப்படும் பகல்நேர சேமிப்பு முறை நடைமுறையில் உள்ளது. இந்த முறையை ரத்து செய்யப் போவதாக, அந்த நாட்டின் அதிபராக தேர்வாகியுள்ள டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில், கோடை காலத்தின்போது கிடைக்கும் சூரிய வெளிச்ச காலத்தை பயன்படுத்திக் கொள்ளும் வகையில், பகல்நேர சேமிப்பு முறை நடைமுறையில் உள்ளது.

இதன்படி, மார்ச் மாதத்தின் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமையில் இருந்து, நவம்பரில் முதல் ஞாயிற்றுக்கிழமை வரை இது அமலில் இருக்கும். இந்த காலத்தில், உள்ளூர் நேரப்படி காலை 2:00 மணிக்கு, ஒரு மணி நேரம் முன்னதாக கடிகாரங்களில் நேரம் மாற்றிக் கொள்ளப்படும்.

இதன் வாயிலாக இந்த காலகட்டத்தில் கிடைக்கும் பகல் நேரத்தை, அலுவலகம் மற்றும் தொழில் செய்வதற்கு பயன்படுத்த முடியும்.

இந்த நடைமுறைக்கு, குடியரசு கட்சி எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. அடுத்த மாதம், 20ம் தேதி அதிபராக பதவியேற்க உள்ள டொனால்டு டிரம்ப், 'இந்த நடைமுறை, மக்களுக்கு தேவையில்லாத நடைமுறை பிரச்னைகளை உருவாக்குவதுடன், செலவையும் அதிகரிக்கச் செய்கிறது.

அதனால், இந்த பகல்நேர சேமிப்பு முறையை ரத்து செய்ய, அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும்' என, சமூக வலைதளப் பதிவில் தெரிவித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us