sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 29, 2026 ,பங்குனி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

ஈரானுடன் மறைமுக பேச்சுவார்த்தை: அமெரிக்க அதிபர் டிரம்ப் தகவல்

/

ஈரானுடன் மறைமுக பேச்சுவார்த்தை: அமெரிக்க அதிபர் டிரம்ப் தகவல்

ஈரானுடன் மறைமுக பேச்சுவார்த்தை: அமெரிக்க அதிபர் டிரம்ப் தகவல்

ஈரானுடன் மறைமுக பேச்சுவார்த்தை: அமெரிக்க அதிபர் டிரம்ப் தகவல்

5


ADDED : பிப் 17, 2026 09:40 AM

Google News

5

ADDED : பிப் 17, 2026 09:40 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வாஷிங்டன்: ஈரானுடன் பேச்சுவார்த்தையில் மறைமுகமாக ஈடுபடுவேன் என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக அமெரிக்கா மற்றும் மேற்காசிய நாடான ஈரான் இடையே பல ஆண்டுகளாக மோதல் நீடிக்கிறது. ஈரானை எப்படியாவது ஒப்பந்தத்தில் கையெழுத்திட வைக்க வேண்டும் என அமெரிக்கா பல்வேறு எச்சரிக்கைகளையும், அழுத்தங்களையும் கொடுத்து வருகிறது. மேற்காசியாவில் போரை தவிர்க்க இரு நாடுகளும் பேச்சு நடத்தவேண்டும் என அரபு நாடுகள் கோரிக்கை விடுத்தன. இதையடுத்து அணுசக்தி தொடர்பாக இரு நாட்டு அதிகாரிகளும் சந்தித்து பேச்சு நடத்தி வருகின்றனர்; ஆனால் இன்னும் உடன்பாடு எட்டப்படவில்லை.

இந்நிலையில் நிருபர்களிடம் அதிபர் டிரம்ப் கூறியதாவது: ஜெனீவாவில் அணுசக்தி ஒப்பநதம் தொடர்பாக ஈரானுக்கும், அமெரிக்காவிற்கும் இடையில் நடைபெறவிருக்கும் பேச்சுவார்த்தைகளில் மறைமுகமாக ஈடுபடுவேன். ஈரான் ஒரு ஒப்பந்தத்தை ஏற்படுத்த விரும்புவதாக நான் நம்புகிறேன். பேச்சுவார்த்தை மிக முக்கியமானதாக இருக்கும். ஈரான் நீண்ட காலமாக பேச்சுவார்த்தைகளில் கடுமையான நிலைப்பாட்டைக் கடைப்பிடித்து வருகிறது.

கடந்தாண்டு அமெரிக்கா ஈரானின் அணுசக்தி தளங்கள் மீது குண்டுவீசியபோது அந்த அணுகுமுறையின் விளைவுகளைக் கற்றுக்கொண்டேன். இந்த முறை பேச்சுவார்த்தையில் ஒரு ஒப்பந்தம் செய்யாவிட்டால் அதன் விளைவுகளை அவர்கள் அறிவார்கள். ஈரானின் அணுசக்தி திறனை அழிக்க B-2 ரக விமானங்களை அனுப்புவதற்குப் பதிலாக நாம் ஒரு ஒப்பந்தம் செய்து கொள்ளலாம். இவ்வாறு அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.






      Dinamalar
      Follow us