sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

இந்தியா மீது டிரம்ப் வரி விதிப்பு; ரஷ்யாவிற்கு பெரிய பாதிப்பு என்கிறார் நேட்டோ அமைப்பு தலைவர்

/

இந்தியா மீது டிரம்ப் வரி விதிப்பு; ரஷ்யாவிற்கு பெரிய பாதிப்பு என்கிறார் நேட்டோ அமைப்பு தலைவர்

இந்தியா மீது டிரம்ப் வரி விதிப்பு; ரஷ்யாவிற்கு பெரிய பாதிப்பு என்கிறார் நேட்டோ அமைப்பு தலைவர்

இந்தியா மீது டிரம்ப் வரி விதிப்பு; ரஷ்யாவிற்கு பெரிய பாதிப்பு என்கிறார் நேட்டோ அமைப்பு தலைவர்

1


UPDATED : செப் 26, 2025 05:06 PM

ADDED : செப் 26, 2025 04:16 PM

Google News

1

UPDATED : செப் 26, 2025 05:06 PM ADDED : செப் 26, 2025 04:16 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வாஷிங்டன்: 'இந்தியா மீதான டிரம்பின் வரிகள் ரஷ்யாவைப் பாதிக்கின்றன' என்று நேட்டோ அமைப்பு தலைவர் மார்க் ரூட் தெரிவித்தார்.

நியூயார்க்கில் ஐ.நா.பொதுச் சபை கூட்டத்தை ஒட்டி, நேட்டோ அமைப்பு தலைவர் மார்க் ரூட் கூறியதாவது: இந்தியா மீதான டிரம்ப்பின் வரி ரஷ்யாவில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த வரி விதிப்பு ரஷ்யாவை பாதிக்கின்றன. டில்லியில் இருந்து புடினுக்கு போன் அழைப்புகள் சென்றுள்ளது. பிரதமர் மோடி, உக்ரைன் போரில் ரஷ்யாவின் திட்டமென்னவென்று கேட்டுள்ளார்.

டிரம்பின் நடவடிக்கை புடினுக்கு மிகப்பெரிய அழுத்தத்தை உருவாக்கி உள்ளது.இந்த நடவடிக்கைகள் உக்ரைன் போரில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது.அதிபர் டிரம்ப் தான் சொல்வதைச் செயல்படுத்துகிறார், ஆனால் இதுவரை நாம் கூட்டாக இணைந்து போரை முடிவுக்குக் கொண்டுவர முடியாததில் வருத்தமடைகிறேன். ஆனால் போர் நிறுத்தத்திற்கு டிரம்ப் பணியாற்றி வருகிறார். இவ்வாறு நேட்டோ அமைப்பு தலைவர் தெரிவித்தார்.

காகித புலி!

ரஷ்யாவுடன் போர் நிறுத்தத்தை எட்டுவதற்கான தனது முயற்சிகள் எதிர்பார்த்ததை விட கடினமாக இருப்பதாக டிரம்ப் ஒப்புக்கொண்டது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு, 'ரஷ்யாவை காகிதப் புலியைக் குறிப்பிட்டதன் மூலம் அதிபர் டிரம்ப் போர் நிறுத்தத்திற்கு நடவடிக்கை எடுப்பதில் சரியாக செயல்படுகிறார் என்று நான் நினைக்கிறேன்' என நேட்டோ அமைப்பு தலைவர் மார்க் ரூட் பதில் அளித்தார்.

மத்திய அரசு பதிலடி

உக்ரைன் விவகாரம் தொடர்பாக விளாடிமிர் புடினிடம் பிரதமர் மோடி கேள்வி எழுப்பியதாக மார்க் ரூட் கூறியதை, மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் மறுத்துள்ளது. இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பிரதமர் நரேந்திர மோடிக்கும், அதிபர் புடினுக்கும் இடையே நடந்ததாகக் கூறப்படும் தொலைபேசி உரையாடல் குறித்து நேட்டோ அமைப்பு தலைவர் மார்க் ரூட் பேசி இருப்பதை நாங்கள் பார்த்தோம்.
அவரது கருத்துக்கள் அனைத்தும் உண்மைக்கு மாறானது, முற்றிலும் ஆதாரமற்றது. எந்த நேரத்திலும் பிரதமர் மோடி, அதிபர் புடின் இடையே உக்ரைன் போர் குறித்து உரையாடல் எதுவும் நடக்கவில்லை.
முக்கிய சர்வதேச நிறுவனங்களின் தலைவர்கள் தங்கள் பொதுக் கருத்துக்களில் அதிக பொறுப்பையும், துல்லியத்தையும் கடைப்பிடிக்க வேண்டும். ஒருபோதும் நடக்காத உரையாடலை நடந்ததாக கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. இவ்வாறு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.








      Dinamalar
      Follow us