தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/உலகம்/ துருக்கி சமூக ஊடகங்களை பயன்படுத்த 16 வயதுக்குட்பட்டோருக்கு தடை

 துருக்கி சமூக ஊடகங்களை பயன்படுத்த 16 வயதுக்குட்பட்டோருக்கு தடை

 துருக்கி சமூக ஊடகங்களை பயன்படுத்த 16 வயதுக்குட்பட்டோருக்கு தடை


ADDED : பிப் 08, 2026 12:49 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 08, 2026 12:49 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அங்காரா: சமூக ஊடக ஆபத்துகளில் இருந்து இளம் வயதினரை பாதுகாக்கும் நோக்கில், 16 வயதுக்குட்பட்டோர், சமூக ஊடகங்கள் பயன்படுத்துவதை கட்டுப்படுத்தும் உலகளாவிய முயற்சியில் தற்போது துருக்கியும் இணைந்து உள்ளது.

மேற்காசிய நாடான துருக்கியின் குடும்ப நலன் மற்றும் சமூக சேவைகள் அமைச்சகம், 16 வயதுக்குட்பட்டோர் சமூக ஊடகங்களை பயன்படுத்துவதை கட்டுப்படுத்தும் சட்ட மசோதாவை அந்நாட்டு பார்லிமென்டில் இம்மாதம் தாக்கல் செய்ய உள்ளது.

இதன்படி, சமூக ஊடக நிறுவனங்கள், 16 வயதுக்குட்பட்டோர் கணக்கு துவங்க அனுமதிக்கக்கூடாது என்றும், மீறினால் பெரும் அபராதம் விதிக்கப்படும் என்றும் துருக்கி அரசு எச்சரித்துள்ளது.

இதேபோன்ற சட்டங்களை, ஏற்கனவே, ஆஸ்திரேலியா, ஸ்பெயின், மலேஷியா, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் கொண்டு வந்துள்ளன. இச்சட்டம் கொண்டு வருவது குறித்து இந்தியாவிலும் விவாதங்கள் நடந்து வருகின்றன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us