துருக்கியை அச்சுறுத்தும் காட்டுத்தீ; வீடுகளை விட்டு வெளியேறும் மக்கள்
துருக்கியை அச்சுறுத்தும் காட்டுத்தீ; வீடுகளை விட்டு வெளியேறும் மக்கள்
ADDED : ஜூலை 27, 2025 08:49 PM

இஸ்தான்பூல்: துருக்கியில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீயினால் ஆயிரக்கணக்கான மக்கள் இருப்பிடங்களை விட்டு வெளியேறி வருகின்றனர்.
துருக்கியில் கடந்த சில நாட்களாக காட்டுத்தீயின் தாக்கம் அதிகரித்து வருகிறது. குறிப்பாக நாட்டின் 4வது பெரிய நகரமான பர்சா கடும் பாதிப்புக்கு ஆளாகி உள்ளது.
அங்கு வசிக்கும் 1500க்கும் அதிகமான மக்கள், காட்டுத்தீயின் வெப்பத்தை தாங்க முடியாமல் தங்கள் இருப்பிடங்களை விட்டு வெளியேறி விட்டனர். காட்டுத்தீ பல்வேறு இடங்களுக்கு பரவி வருவதால் வெளியேறும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது.
தீயைக் கட்டுப்படுத்த கிட்டத்தட்ட 1,100க்கும் அதிகமான தீயணைப்பு வீரர்கள் களம் இறங்கி உள்ளனர். தற்போதுள்ள சூழல்படி, 1765 பேர் தங்களின் இருப்பிடங்களை விட்டு சென்றுவிட்டனர்.
காட்டுத்தீயின் தாக்கம் எதிரொலியாக பர்சா-அங்காரா சாலை தற்காலிகமாக மூடப்பட்டு உள்ளது. ஆர்பன் சரிபால் நகரத்தில் 7, 413 ஏக்கர் நிலங்கள் தீயின் நாக்குகளுக்கு இரையாகி இருக்கின்றன.
தீயை அணைக்கும் பணியின் போது வீரர் ஒருவர் பலியாகி விட்டதாக பர்சா மேயர் முஸ்தபா போஸ்பெய் அறிவித்துள்ளார்.