துருக்கியில் பயங்கர வெடிவிபத்து; 12 பேர் பரிதாப பலி
துருக்கியில் பயங்கர வெடிவிபத்து; 12 பேர் பரிதாப பலி
UPDATED : டிச 24, 2024 04:36 PM
ADDED : டிச 24, 2024 02:40 PM

அங்காரா: துருக்கியில் வெடிமருந்து தொழிற்சாலையில் ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்தில், 12 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
துருக்கியில், பாலிகேசிர் மாகாணத்தில், வெடிமருந்து தொழிற்சாலை ஒன்று இயங்கி வருகிறது. இன்று (டிச.,24) தொழிலாளர்கள் வழக்கம் போல் பணியில் ஈடுபட்டு இருந்தனர். திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் கட்டடம் இடிந்து தரைமட்டமாகின. அருகில் உள்ள கட்டங்களும் சேதம் அடைந்தள்ளன. சம்பவ இடத்திற்கு விரைந்த, தீயணைப்பு படையினர் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர்.
தீ விபத்து நடந்த இடம், புகை மண்டலமாக காட்சி அளிக்கிறது. இந்த விபத்தில், 12 பேர் தீயில் கருகி உயிரிழந்தனர். மேலும், 4 பேர் பலத்த காயமுற்றனர். இவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.