ஈரானின் இரட்டை குண்டு வெடிப்பு: பலி 103 ஆக அதிகரிப்பு
ஈரானின் இரட்டை குண்டு வெடிப்பு: பலி 103 ஆக அதிகரிப்பு
UPDATED : ஜன 03, 2024 11:34 PM
ADDED : ஜன 03, 2024 07:07 PM

டெஹரான்: ஈரானில் முன்னாள் ராணுவ ஜெனரலின் கல்லறையில் அஞ்சலி நிகழ்ச்சியின் போது நடந்த இரட்டை குண்டு வெடிப்பு சம்பவங்களில் 103பேர் உடல் சிதறி பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஈரான் முன்னாள் ராணுவ ஜெனரல் காஸிம் சுலைமாணி, இவர் கடந்த 2020ம் ஆண்டு இதே நாளில் அமெரிக்க கூட்டு படைநடத்திய தாக்குதல் கொல்லப்பட்டார். இன்று அவரது நான்காம் ஆண்டு நினைவுநாளையொட்டி, டெஹ்ரானின் தெற்கு நகரான கெர்மான் என்ற இடத்தில் ஷாஹில் அல் ஜமான் என்ற மசூதியில் அடக்கம் செய்யப்பட்டுள்ள நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துவதற்காக ஏராளமானோர் கூடியிருந்தனர்.
அப்போது அங்கு பயங்கர சத்தத்துடுன் அடுத்தடுத்து இரண்டு குண்வெடிப்பு சம்பவங்கள் நடந்தன. இதில் 81பேர் பலியாயினர். 200 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இரட்டை குண்டு வெடிப்பு குண்டு நடந்துள்ளதால் பலி எண்ணிக்கை கூடும் என நம்பப்படுகிறது.
தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் வெடிகுண்டுகள் ரிமோட் மூலம் வெடிக்க செய்துள்ளதாக தெரிய வந்துள்ளது.