ஜப்பான்: தாய் நாடு திரும்பும் இரட்டை பாண்டா கரடிகள்
ஜப்பான்: தாய் நாடு திரும்பும் இரட்டை பாண்டா கரடிகள்
UPDATED : டிச 16, 2025 06:21 AM
ADDED : டிச 16, 2025 06:00 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
டோக்கியோ: ஜப்பான் தலைநகர் டோக்கியோ உயிரியல் பூங்காவில் உள்ள பிரபலமான இரட்டை பாண்டாக்களான ஷியாவோ ஷியாவோ மற்றும் லெய் லெய் வரும் ஜனவரி மாத இறுதியில், சொந்த நாடான சீனாவுக்கே செல்ல இருக்கின்றன.
கடந்த, 2021ம் ஆண்டு நம் அண்டை நாடான சீனா, இனப்பெருக்க ஆராய்ச்சிக்காக, இரண்டு பாண்டாக்களை, ஆசிய நாடான ஜப்பானுக்கு அனுப்பியது. அங்கு, 2021ல் பிறந்தவைதான் இந்த இரட்டையர்கள்.
அப்போது செய்யப்பட்ட ஒப்பந்தபடி, இந்த பாண்டாக்களை, 2026 பிப்ரவரி மாதத்திற்குள் சீனாவுக்கு திருப்பி அனுப்ப வேண்டும். இதனால் ஜப்பான் அரை நுாற்றாண்டுக்குப் பின் முதல் முறையாக பாண்டா இல்லாத நாடாக மாறும்.

