தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/உலகம்/ஸ்பெயினில் இரு ரயில்கள் நேருக்கு நேர் மோதி கோர விபத்து; 64 பேர் பலியான சோகம்

ஸ்பெயினில் இரு ரயில்கள் நேருக்கு நேர் மோதி கோர விபத்து; 64 பேர் பலியான சோகம்

ஸ்பெயினில் இரு ரயில்கள் நேருக்கு நேர் மோதி கோர விபத்து; 64 பேர் பலியான சோகம்

2


UPDATED : அக் 28, 2026 07:15 PM

ADDED : அக் 28, 2026 03:57 PM

Follow on GoogleFavourite on Google

2

UPDATED : அக் 28, 2026 07:15 PM ADDED : அக் 28, 2026 03:57 PM


2
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ரியல் மாட்ரிட்: ஸ்பெயினில் ரயில்கள் மோதிக் கொண்டதில் பயணிகள் 64 பேர் பலியாகினர். விபத்து எப்படி நிகழ்ந்தது என்பது குறித்து அந்நாட்டு ரயில்வே துறை விசாரணையை தொடங்கி இருக்கிறது.

ஸ்பெயினின் டோலேடோ மாகாணத்தில் அமைந்துள்ள லோஸ் யெபெனஸ் மற்றும் உர்டா ஆகிய இடங்களுக்கு இடையே அமைந்துள்ள மாட்ரி - அண்டலூசியா அதிவேக ரயில் பாதையில் நிகழ்ந்திருக்கிறது. மாட்ரிட்டில் இருந்து செவில்லே நோக்கி சென்ற ரயிலும், எதிர் திசையில் வந்து கொண்டிருந்த மற்றொரு ரயிலும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகி இருக்கின்றன.

இதில் இரு ரயில்களின் பெட்டிகளும் தடம்புரண்டு தீப்பிடித்துள்ளன. விபத்தில், முதல்கட்டமாக கிடைத்த தகவல்களின் படி 64 பேர் உயிரிழந்து இருப்பதாக ஸ்பெயின் அரசு செய்தி நிறுவனமும், உள்ளூர் ஊடகங்களும் செய்தியை வெளியிட்டு இருக்கின்றன. விபத்தின் எதிரொலியாக, மாட்ரிட், சியுடாட் ரியல் மற்றும் அந்தலூசியா இடையே ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டு உள்ளது.

இதுகுறித்து உர்தா நகர மேயர் மானுவல் கலான் கூறுகையில், ' மீட்பு பணிகளை முடுக்கிவிட்டு இருக்கிறோம். அவசரகால பணியில் அனைவரும் ஈடுபட்டுள்ளோம். அவசர மருத்துவக்குழுக்கள் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன. எங்களுக்கு அங்கே இருந்து வரும் செய்திகள் கவலை அளிப்பதாக உள்ளன. விபத்து எப்படி நிகழ்ந்தது என்பது தெரியவில்லை. விசாரணை நடக்கிறது' என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us