உக்ரைன் போர் முடிவுக்கு வருமா: டிரம்ப் -ஜெலன்ஸ்கி பேச்சு முறிவு
உக்ரைன் போர் முடிவுக்கு வருமா: டிரம்ப் -ஜெலன்ஸ்கி பேச்சு முறிவு
UPDATED : மார் 01, 2025 06:32 AM
ADDED : மார் 01, 2025 02:28 AM

வாஷிங்டன்: உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வரும் விதமாக அமெரிக்க அதிபர் டெனால்டு டிரம்ப்பை, உக்ரைன் அதிபர் வேலோமிடிர் ஜெலன்ஸ்கி சந்தித்து பேசினார்.
உக்ரைன்-ரஷியா இடையே 3 ஆண்டுக்கு மேல் போர் நடந்துவருகிறது. இந்தப் போரை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்க அதிபர் டிரம்ப் நடவடிக்கை எடுத்து, ரஷிய அதிபர் புதினுடன் தொலைபேசியில் உரையாடினார்.
இதையடுத்து உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அமெரிக்கா சென்று வெள்ளை மாளிகையில் டிரம்ப்பை சந்தித்தார். அப்போது ரஷியாவுக்கு எதிரான போரில் அனைத்து உதவிகளையும் அமெரிக்காவிடம் இருந்து கேட்டுப் பெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ரஷியாவுக்கு எதிரான போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா வழங்கிய நிதி உதவிகளுக்கு பதிலாக உக்ரைனில் உள்ள அரிய வகை கனிம வளங்களை வெட்டி எடுக்கும் உரிமையை அமெரிக்காவுக்கு கால வரம்பில்லாமல் வழங்க டிரம்ப் வலியுறுத்தி வந்தார். மேலும் உக்ரைனில் தேர்தல் நடத்தாமல் ஜெலன்ஸ்கி பதவியில் நீடிப்பதாக டிரம்ப் குற்றம் சாட்டினார்.