தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/உலகம்/ உக்ரைன் : ரஷ்ய அடையாளம் தவிர்க்க நாணயத்தின் பெயர் மாற்றம்

உக்ரைன் : ரஷ்ய அடையாளம் தவிர்க்க நாணயத்தின் பெயர் மாற்றம்

உக்ரைன் : ரஷ்ய அடையாளம் தவிர்க்க நாணயத்தின் பெயர் மாற்றம்


ADDED : நவ 07, 2025 12:57 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 07, 2025 12:57 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கீவ்:: உக்ரைன் தன் நாட்டு நாணயத்தில் பயன்படுத்தப்படும்: கிழக்கு ஐரோப்பாவில் உள்ள உக்ரைன், 1991ல் சோவியத் யூனியன் உடைந்தபோது, அதில் இருந்து பிரிந்து தனி நாடானது.

சோவியத் யூனியன் காலத்தில் பயன்படுத்தப்பட்ட, 'சோவியத் ரூபிள்' என்ற கரன்சி நோட்டுகள் ரஷ்யா உட்பட சில நாடுகளில் தற்போதும் பயன்பாட்டில் உள்ளன.

உக்ரைனும் பயன்படுத்தி வந்தது. கடந்த, 1996ல், 'ஹிரைவ்னியா' என்ற கரன்சிக்கு உக்ரைன் மாறியது. அதே நேரத்தில், கோபெக் என்ற நாணயத்தை மட்டும் உக்ரைன் தொடர்ந்து பயன்படுத்தி வருகிறது.

அதாவது, 100 கோபெக் என்பது ஒரு ஹிரைவ்னியா ஆகும். இந்நிலையில், ரஷ்யாவின் அடையாளங்களை பயன்படுத்துவதை உக்ரைன் தவிர்த்து வரும் நிலையில், கோபெக் என்ற நாணயத்தின் பெயரை, 'ஷா' என்று மாற்ற உக்ரைன் முடிவு செய்துள்ளது. ஷா என்பது, கடந்த 16 மற்றும் 17ம் நுாற்றாண்டுகளில் உக்ரைனின் ஒரு நாணய அலகாக இருந்தது.

ஒரு கோபெக் நாணய மதிப்பே ஒரு ஷா நாணயத்தின் மதிப்பாக இருக்கும் என அந்நாட்டு தேசிய வங்கி தெரிவித்துள்ளது.

விரைவில் இந்த மாற்றம் நடைமுறைக்கு வரஉள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us