தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/உலகம்/ 1,000க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் வீசி ரஷ்யா மீது உக்ரைன் பெரும் தாக்குதல்

1,000க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் வீசி ரஷ்யா மீது உக்ரைன் பெரும் தாக்குதல்

1,000க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் வீசி ரஷ்யா மீது உக்ரைன் பெரும் தாக்குதல்


ADDED : செப் 20, 2026 07:04 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 20, 2026 07:04 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மாஸ்கோ: உக்ரைன் ஒரே இரவில் ரஷ்யா மீது 1,000க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் எனப்படும் ஆளில்லா சிறிய விமானங்களை ஏவி பெரும் தாக்குதலை நடத்தியுள்ளது.

கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் – ரஷ்யா இடையே நான்காண்டுகளைக் கடந்து போர் நடந்து வருகிறது. போர் நிறுத்த முயற்சிகள் எவ்வித பலனையும் அளிக்கவில்லை. இரு தரப்பும் பரஸ்பர தாக்குதல்களை தொடர்ந்து வருகின்றன. இதன் ஒருபகுதியாக, நேற்று முன்தினம் இரவு ரஷ்ய தலைநகர் மாஸ்கோ மீது, 1,000க்கும் மேற்பட்ட ட்ரோன்களை ஏவி பெரும் தாக்குதலை உக்ரைன் மேற்கொண்டது.

கிரீமியா மற்றும் கருங்கடல் உட்பட நாடு முழுதும் உள்ள பகுதிகளில் 1,100 உக்ரைன் ட்ரோன்களை தாங்கள் இடைமறித்து சுட்டு வீழ்த்தியதாக ரஷ்ய ராணுவ அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும், தலைநகர் மாஸ்கோவை நெருங்கியபோது மட்டும 450 ட்ரோன்கள் அழிக்கப்பட்டதாக அந்நகர மேயர் செர்கே சோபியான் தெரிவித்தார். தலைநகர் மீது நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலில் இதுவே மிகப் பெரியது என அவர் மேலும் தெரிவித்தார்.

வான் பாதுகாப்பு அமைப்புகள் வாயிலாக ட்ரோன்கள் இடைமறித்து அழிக்கப்பட்டாலும், அதன் சிதறல்கள் மற்றும் சில நேரடி தாக்குதலில் சேதங்கள் ஏற்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

மாஸ்கோ பிராந்தியத்தில் 74 வயது முதியவரும், 44 வயது பெண் ஒருவரும் கொல்லப்பட்டதாகவும், 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் கூறப்படுகிறது. மேலும், ஒரு குடியிருப்புக் கட்டடம் சேதமடைந்ததுடன், மாஸ்கோ எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் தீ விபத்தும் ஏற்பட்டது.

தற்போது ரஷ்யாவில் பார்லிமென்ட் தேர்தல் நடந்து வருவதால், போர் சூழலில் நடத்தப்பட்ட நாட்டின் முதல் பார்லிமென்ட் தேர்தல் இது என்றானது. தேர்தலின் மூன்றாவது மற்றும் இறுதி கட்டத் தேர்தலின் போது இந்த மிகப் பெரிய தாக்குதல் நடத்தப்பட்டிருப்பது, தேர்தலை சீர்குலைக்கும் நோக்கத்துடன் நடத்தப்பட்டது என ரஷ்ய அதிகாரிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர். இருப்பினும் தேர்தல் எவ்வித இடையூறுமின்றி வெற்றிகரமாக நடந்து முடிந்ததாக ரஷ்யா தெரிவித்துள்ளது.

கிரீமியா மற்றும் ரஷ்யாவால் சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்ட உக்ரைனின் டொனெட்ஸ்க், லுஹான்ஸ்க், ஹெர்சன், ஜபோரிஷியா ஆகிய பிராந்தியங்களிலும் தேர்தல் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. இத்தாக்குதல் குறித்து உக்ரைனிடம் இருந்து உடனடியாக எவ்வித கருத்தும் வெளியாகவில்லை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us