ADDED : ஜூலை 17, 2025 02:47 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கீவ்:ரஷ்யாவுடனான போர் நீடித்து வரும் நிலையில், பிரதமரை மாற்றியுள்ளார், உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி.
கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது, 2022 பிப்.,ல் ரஷ்யா துவங்கிய போர், தற்போதும் தொடர்கிறது. இதற்கிடையே, கனிம வளத்தை பகிர்ந்து கொள்வது தொடர்பாக அமெரிக்காவுடன் உக்ரைன் பேசி வருகிறது.
இந்நிலையில், பிரதமராக உள்ள டெனிஸ் ஷ்மிஹால் பதவியை ராஜினாமா செய்துள்ளார். அவருக்கு பதில் யூலியா ஸ்வைரிடென்கோ புதிய பிரதமராக நியமிக்கப்பட்டார்.

