கடல் 'ட்ரோன்' பயன்படுத்தி உக்ரைன் உளவு கப்பல் அழிப்பு
கடல் 'ட்ரோன்' பயன்படுத்தி உக்ரைன் உளவு கப்பல் அழிப்பு
ADDED : ஆக 30, 2025 05:43 AM

கீவ் : ஐரோப்பாவின் கருங்க டல் பகுதியில் கண்காணிப்புக்காக உக்ரைன் நிறுத்தி வைத்திருந்த மிகப்பெரிய கப்பலை, ரஷ்ய கடற்படை, கடல் 'ட்ரோன்' எனப்படும் ஆளில்லா படகை அனுப்பி வெடித்து சிதற வைத்தது.
கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது ரஷ்யா கடந்த 2022ல் போரை துவங்கியது.இந்த போரை முடிவுக்கு கொண்டு வர அமைதி ஒப்பந்தம் ஏற்படுத்தும் முயற்சியில் அமெரிக்க அதிபர் டிரம்ப் ஈடுபட்டுள்ளார்.
இந்த முயற்சியில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி மற்றும் ஐரோப்பிய நாடுகளின் தலைவர்கள் பலரும் பங்கேற்றனர். ஒரு பக்கம் அமைதி ஒப்பந்தத்திற்கான பணிகள் நடந்து வரும் வேளையில், மறுபக்கம் உக்ரைன் மீதான தாக்குதலையும் ரஷ்யா கைவிடவில்லை.
இந்நிலையில், கருங்கடல் பகுதியின் ஒடெசா பகுதி உக்ரைன் கட்டுப்பாட்டில் உள்ளது. இங்கு உக்ரைன் கடற்படையின் 'சிம்பெரோபோல்' என்ற உளவு கப்பல் கண்காணிப்பு பணிக்காக நிறுத்தப்பட்டிருந்தது.
ரஷ்யா முதல் முறையாக கடல் 'ட்ரோன்' எனப்படும் வெடிபொருட்கள் நிரப்பிய ஆளில்லா படகை அனுப்பி, நேற்று முன் தினம் இந்த கப்பலை வெடிக்கச் செய்தது. பணியாளர்களில் ஒருவர் உயிரிழந்தார். பலர் காயமடைந்துள்ளதாக உக்ரைன் கடற்படை கூறியுள்ளது.

