அமெரிக்காவின் காசா அமைதி திட்டத்துக்கு ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில் அங்கீகாரம்
அமெரிக்காவின் காசா அமைதி திட்டத்துக்கு ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில் அங்கீகாரம்
ADDED : நவ 19, 2025 07:35 AM

நியூயார்க்: காசா போரை முடிவுக் கு கொண்டு வர அமெரிக்கா முன்மொழிந்துள்ள அமைதி திட்டத்தித்திற்கு, ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சில் அங்கீகாரம் அளித்துள்ளது.
மேற்காசிய நாடான இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்தின் காசாவை தன் கட்டுப்பா ட்டில் வைத்திருக்கும் ஹமாஸ் பயங்கரவாத அமைப்புக்கும் இடையேயான போர் அமெரிக்காவின் 20 அம்ச அமைதி திட்டத்தின் கீழ் கடந்த மாதம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
இந்நி லையில், அமெரிக்க அதிபர் டிரம்ப் கொண்டு வந்த அமைதி திட்டத்திற்கு அங்கீகாரம் வழங்கக் கோரியும், காசாவில் அமைதி பணியை மேற்கொள்ள சர்வதேச கூட்டுப் படைக்கு அங்கீகாரம் அளிப்பது குறித்தும், ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சிலில் அமெரிக்கா தீர்மானம் ஒன்றை தாக்கல் செய்தது.
இத்தீர்மானம் மீதான வாக்கெடுப்பு, பாதுகாப்பு கவுன்சிலில் நேற்று நடந்தது. மொத்தமுள்ள 15 உறுப்பினர்களில் 13 பேர் தீர்மானத்துக்கு ஆதரவாக ஓட்டளித்தனர். சீனா மற்றும் ரஷ்யா பங்கேற்கவில்லை. இதையடுத்து, அமெரிக்காவின் வரைவு தீர்மானம் பாதுகாப்பு கவுன்சிலின் பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவுடன் நிறைவேறியது.
தீர்மானத்தின் முக்கிய அம்சங்கள் • டிரம்பின் 20 அம்ச திட்டம், இத்தீர்மானத்தின் ஒரு இணைப்பாக சேர்க்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்டு உள்ளது • காசாவின் இடைக்கால நிர்வாகத்தை மேற்பார்வையிடுவதற்காக, அமெரிக்க அதிபர் டிரம்ப் தலைமையில் அமைதிக்கான நிர்வாக குழு அமைக்கவும் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது • காசாவில் பாதுகாப்பை உறுதி செய்யவும், ஹமாஸ் உள்ளிட்ட ஆயுத குழுக்களை நிராயுதபாணியாக்குவதற்கு தேவையான ஒரு சர்வதேச படைக்கு, இத்தீர்மானம் அங்கீகாரம் வழங்கியுள்ளது.

