தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/உலகம்/வேற்றுமையில் ஒற்றுமையை உலகிற்கு உணர்த்துவதே பாரதத்தின் இலக்கு; மோகன் பாகவத் வலியுறுத்தல்

வேற்றுமையில் ஒற்றுமையை உலகிற்கு உணர்த்துவதே பாரதத்தின் இலக்கு; மோகன் பாகவத் வலியுறுத்தல்

வேற்றுமையில் ஒற்றுமையை உலகிற்கு உணர்த்துவதே பாரதத்தின் இலக்கு; மோகன் பாகவத் வலியுறுத்தல்

29


UPDATED : ஆக 30, 2026 05:17 PM

ADDED : ஆக 30, 2026 08:47 AM

Follow on GoogleFavourite on Google

29

UPDATED : ஆக 30, 2026 05:17 PM ADDED : ஆக 30, 2026 08:47 AM


29
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

-நமது சிறப்பு நிருபர்-

'வேற்றுமையில் ஒற்றுமை எனும் உண்மையை உணர்வதும், அவ்வப்போது உலகை அதை உணர வைப்பதுமே பாரதத்தின் இலக்கு' என நியூயார்க்கில் நடந்த நிகழ்ச்சியில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பேசுகையில் தெரிவித்தார்.

நியூயார்க்கில் நடைபெற்ற 'யுனிவர்சல் ஒன்2026' விழாவில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பேசியதாவது: இந்தியா பல்வேறு வேறுபாடுகளுக்கு இடையே ஒற்றுமையை உலகிற்கு உணர்த்தும் நாடாகத் திகழ்கிறது;

நமது தற்போதைய அரசியல் சூழல் சுயநலம் சார்ந்ததாக மாறிவருகிறது. ஹிந்து மதம் மனித குல ஒற்றுமையை நம்புகிறது. இந்தியாவில் முஸ்லிம்கள் இருக்கக்கூடாது என்று எந்து ஹிந்து நினைத்தாலும் அவர் ஒரு ஹிந்து கிடையாது.

மதச் சடங்குகளில் வேறுபாடுகள் இருந்தாலும், மனிதநேயம் ஒன்றே என்பதைத்தான் இந்தியக் கலாசாரம் நமக்குக் கற்பிக்கிறது. வெவ்வேறு மத நடைமுறைகள் இறுதியில் ஒரே உண்மையையும் இறைத் தன்மையையுமே அடைகின்றன.

வேற்றுமையில் ஒற்றுமையே நாட்டின் பலம்; வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் தாங்கள் வசிக்கும் நாடுகளுக்கு விசுவாசமாகவும், தங்களின் கடமைகளைச் சரியாகச் செய்ய வேண்டும்.

ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு கண்ணியம் உண்டு. மனிதர்களிடையே எந்த வேறுபாடும் இல்லை. பன்முகத்தன்மை பாதுகாக்கப்பட வேண்டும். பாரதத்தைப் பொறுத்தவரை, இந்த ஒற்றுமையும் வேற்றுமையும், இரண்டுமே மரபணுவிலேயே உள்ளன.

வேற்றுமையில் ஒற்றுமை என்பதே இயற்கையின் உண்மையான தத்துவம். பாரதம் வரலாற்று ரீதியாகவே அனைத்து மதத்தினருக்கும் புகலிடம் அளித்து ஒற்றுமையாக வாழும் பாரம்பரியத்தை கொண்டுள்ளது. இவ்வாறு மோகன் பாகவத் பேசினார்.

வேற்றுமையில் ஒற்றுமை!

மேலும் மோகன் பாகவத் பேசியதாவது: சுவாமி விவேகானந்தர் கூறினார்: ஒவ்வொரு நாட்டிற்கும் ஒரு குறிக்கோளை நிறைவேற்ற வேண்டியுள்ளது; ஒவ்வொரு நாட்டிற்கும் ஒரு இலக்கை அடைய வேண்டியுள்ளது. பாரதத்திற்கு அளிக்கப்பட்ட இலக்கு என்ன என்றால், 'வேற்றுமையில் ஒற்றுமை' எனும் உண்மையை உணர்வதும், அவ்வப்போது உலகை அதை உணர வைப்பதுமே ஆகும்.
நாம் அனைவரும் ஒன்றே; அந்த ஒற்றுமைக்கு வேற்றுமை ஒரு முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைகிறது. எனவே, வேற்றுமையைக் கொண்டாட வேண்டும், மதிக்க வேண்டும், ஏற்றுக்கொள்ள வேண்டும். அதே வேளையில், அந்த ஒற்றுமை உணர்வையும் நாம் எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும்; அது ஒரு மிக உண்மையான உணர்வாகும். இவ்வாறு மோகன் பாகவத் பேசினார்.



ரீல்ஸ் வீடியோ பாருங்கள்!

நியூயார்க்கில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பரபரப்பு பேச்சு

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us