தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/உலகம்/ மீண்டும் அமைதி பேச்சை தொடர அமெரிக்கா சம்மதம்

 மீண்டும் அமைதி பேச்சை தொடர அமெரிக்கா சம்மதம்

 மீண்டும் அமைதி பேச்சை தொடர அமெரிக்கா சம்மதம்


ADDED : ஜூலை 11, 2026 02:13 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 11, 2026 02:13 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வாஷிங்டன்: மேற்காசிய நாடான ஈரானுடன், அமெரிக்கா - இஸ்ரேல் படைகள் இணைந்து கடந்த பி ப்ரவரி இறுதியில் தாக்குதலை தொடங்கின. இந்த போரை முடிவுக்கு கொண்டு வர நடந்த பேச்சில், தற்காலிக அமைதி ஒப்பந்தம் கை யெழுத்தானது.

ஆனால் ஒப்பந்தத்தை மீறும் வகையில், சமீபத்தில் ஹார்முஸ் ஜலசந்தியை ஒட்டிய பகுதியில் சென்ற மூன்று வணிக கப்பல்கள் மீது ஈரான் ஏவுகணை தாக்குதலை நடத்தியது.

இதில் கோபமடைந்த அமெரிக்க அதிபர் டிரம்ப், ஈரான் உடனான போர் நிறுத்தம் முடிவுக்கு வருவதாக அறிவித்தார். மேலும், ஈரானுடன் பேச்சு நடத்துவதில் எவ்வித பிரயோஜனமும் இல்லை என குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில், அமெரிக்கா - ஈரான் இடையேயான பதற்றத்தை தணிக்க கத்தார் தீவிர முயற்சியில் இறங்கியுள்ளது.

அமெரிக்காவின் ஒருங்கிணைப்புடன் நடக்கும் இந்த முயற்சியை அடுத்து, கத்தாரின் உயர்நிலைக்குழுவினர் ஈரான் தலைநகர் டெஹ்ரானில் ஈரானின் முக்கிய தலைவர்களை சந்தித்து பேச்சு நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் தன் சமூக வலைதளத்தில் குறிப்பிட்டு உள்ளதாவது:

அமைதி பேச்சை தொடரும்படி ஈரான் நம்மிடம் கேட்டுக்கொண்டுள்ளது. நாமும் அதற்கு ஒப்புக்கொண்டுள்ளோம். ஆனால், இரு நாடுகளுக்கும் இடையிலான போர் நிறுத்தம் முற்றிலும் முடிவுக்கு வந்துவிட்டது என்பதை அமெரிக்கா எவ்வித சந்தேகத்திற்கும் இடமின்றி ஈரானிடம் தெளிவாக தெரிவித்துவிட்டது.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us