உள்ளடக்கத்திற்கு செல்ல

அமெரிக்க விமானப்படையின் எப்-16 போர் விமானம் விபத்து; பயிற்சி ஒத்திகையின் போது பரபரப்பு
அமெரிக்க விமானப்படையின் எப்-16 போர் விமானம் விபத்து; பயிற்சி ஒத்திகையின் போது பரபரப்பு
ADDED : செப் 18, 2026 06:53 AM

அ நிறம் | அளவு
வாஷிங்டன்: அமெரிக்காவில் பயிற்சி ஒத்திகையின் போது விமானப்படைக்கு சொந்தமான எப்-16 போர் விமான விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
அமெரிக்காவின் மிச்சிகன் மாநிலம், பிளேயர் டவுன்ஷிப் அருகில் விமானப்படைக்கு சொந்தமான எப்-16 போர் விமானம் வழக்கமான பயிற்சி ஒத்திகையில் ஈடுபட்டு இருந்தது. அப்போது திடீரென விமானம் விபத்தில் சிக்கியது. விமானி சரியான நேரத்தில் செயல்பட்டு விமானத்திலிருந்து வெளியேறியதால் உயிர் தப்பினார்.
விமானி அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். விபத்து நடந்த பகுதியில் நச்சு ரசாயன கசிவு அபாயம் ஏற்பட்டதால், அப்பகுதியில் இருந்தவர்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டனர். அப்பகுதியில் போக்குவரத்து தடைசெய்யப்பட்டு உள்ளது. விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடக்கிறது.
