விண்வெளியில் 10 லட்சம் செயற்கைக்கோள்களுடன் ஏஐ டேட்டா சென்டர்: ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்திற்கு அமெரிக்கா அனுமதி
விண்வெளியில் 10 லட்சம் செயற்கைக்கோள்களுடன் ஏஐ டேட்டா சென்டர்: ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்திற்கு அமெரிக்கா அனுமதி
ADDED : நவ 26, 2026 08:09 AM

டெக்சாஸ்: விண்வெளியில் சுமார் 10 லட்சம் செயற்கைக்கோள்களை நிலைநிறுத்தி, அதிநவீன ஏ.ஐ., டேட்டா சென்டர்களை அமைப்பதற்கு, எலான் மஸ்கின் 'ஸ்பேஸ் எக்ஸ்' நிறுவனத்திற்கு அமெரிக்காவின் பெடரல் கம்யூனிகேஷன்ஸ் கமிஷன் அனுமதி வழங்கியுள்ளது.
'ஸ்டார்மைண்ட்' எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தத் திட்டத்தின் மூலம், விண்வெளியில் கிடைக்கும் தடையற்ற சூரிய சக்தியைப் பயன்படுத்தி, ஏஐ தரவு மையங்கள் இயக்கப்படும். இவை பூமிக்குத் தேவையான மிகப்பெரிய அளவிலான தரவுகளை விண்வெளியிலிருந்தே செயலாக்கம் செய்து அனுப்பும்.
இது குறித்து எப்.சி.சி., தலைவர் பிரெண்டன் கார் கூறியதாவது: அதிபர் டிரம்ப் தலைமையில் அமெரிக்கா சூப்பர் இன்டெலிஜென்ஸ் சகாப்தத்தை நோக்கி உலகை வழிநடத்துகிறது. முதல்முறையாக விண்வெளியில் 10 லட்சம் கம்ப்யூட்டிங் மாட்யூல்களை நிறுவ அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
இந்தத் திட்டத்தின்படி, 2033 நவம்பருக்குள் பணிகளைத் தொடங்கி, 2035 நவம்பருக்குள் 1 லட்சம் செயற்கைக்கோள்களையும், 2038 நவம்பருக்குள் 50 சதவீத செயற்கைக்கோள்களையும்(5 லட்சம்), ஸ்பேஸ் எக்ஸ் விண்ணில் நிறுவ வேண்டும் என காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
