sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 28, 2026 ,பங்குனி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

கிரீன்லாந்து மீதான அமெரிக்கா கட்டுப்பாடு தவிர்க்க முடியாதது: மீண்டும் வலியுறுத்திய டிரம்ப்

/

கிரீன்லாந்து மீதான அமெரிக்கா கட்டுப்பாடு தவிர்க்க முடியாதது: மீண்டும் வலியுறுத்திய டிரம்ப்

கிரீன்லாந்து மீதான அமெரிக்கா கட்டுப்பாடு தவிர்க்க முடியாதது: மீண்டும் வலியுறுத்திய டிரம்ப்

கிரீன்லாந்து மீதான அமெரிக்கா கட்டுப்பாடு தவிர்க்க முடியாதது: மீண்டும் வலியுறுத்திய டிரம்ப்

1


ADDED : ஜன 14, 2026 09:21 PM

Google News

ADDED : ஜன 14, 2026 09:21 PM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வாஷிங்டன்: கிரின்லாந்து மீதான அமெரிக்காவின் கட்டுப்பாடு தவிர்க்க முடியாதது என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மீண்டும் வலியுறுத்தி உள்ளார்.

டென்மார்க்கின் தன்னாட்சி பெற்ற பிரதேசமான கிரீன்லாந்தை அமெரிக்க அதிபர் டிரம்ப், பாதுகாப்பு காரணங்களுக்காக, அமெரிக்கா உடன் இணைத்து கொள்ள வேண்டும் என்று கடந்த வாரம் ( ஜனவரி 7) கூறியிருந்த நிலையில், தற்போது கிரின்லாந்து மீதான அமெரிக்காவின் கட்டுப்பாடு தவிர்க்க முடியாதது என்று மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ளதாவது:

கிரீன்லாந்து அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பிற்கு மிக முக்கியமானது. குறிப்பாக தான் உருவாக்கி வரும் 'கோல்டன் டோம்' (Golden Dome) ஏவுகணை பாதுகாப்பு அமைப்பிற்கு இது அவசியம்.

அமெரிக்கா, கிரீன்லாந்தை கையகப்படுத்த நேட்டோ வழிவகுக்க வேண்டும். அவ்வாறு செய்யாவிட்டால், ரஷ்யா அல்லது சீனா அந்தப் பகுதியைக் கைப்பற்றிவிடும் என எச்சரிக்கிறேன்.

கிரீன்லாந்து பிரதமர் ஜென்ஸ்-பெடரிக் நீல்சன் அமெரிக்காவுடன் இணைய மறுத்ததால், அது அவருக்கு 'பெரிய பிரச்சனையாக' மாறும் என்று எச்சரிக்கிறேன்.இவ்வாறு டிரம்ப் பதிவிட்டுள்ளார்.

இது ஒருபுறம் இருக்க,டென்மார்க் மற்றும் கிரீன்லாந்து தலைவர்கள் இந்தத் தீவு விற்பனைக்கு அல்ல என்று திட்டவட்டமாக மறுத்துள்ளனர். பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி போன்ற ஐரோப்பிய நாடுகளும் டென்மார்க்கிற்கு ஆதரவாக நின்றதோடு, ட்ரம்ப்பின் இந்த மிரட்டல் போக்கை கண்டித்துள்ளன.

இந்த பரபரப்பான சூழ்நிலைக்கு மத்தியில், இன்று (ஜனவரி 14 )அன்று அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் டென்மார்க் மற்றும் கிரீன்லாந்து வெளியுறவு அமைச்சர்களுடன் வாஷிங்டனில் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளார்.






      Dinamalar
      Follow us