21 வயதுக்குட்பட்டவர்களுக்கு துப்பாக்கி விற்கக் கூடாது; அமெரிக்க கோர்ட் உத்தரவு
21 வயதுக்குட்பட்டவர்களுக்கு துப்பாக்கி விற்கக் கூடாது; அமெரிக்க கோர்ட் உத்தரவு
ADDED : ஜன 31, 2025 07:33 AM

வாஷிங்டன்: அமெரிக்காவில் 21 வயதுக்குட்பட்டவர்களுக்கு துப்பாக்கிகளை விற்கக் கூடாது என்று அந்நாட்டு பெடரல் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
அமெரிக்காவில் துப்பாக்கி கலாசாரம் நாளுக்கு நாள் பெருகி வருகிறது. இதனால், துப்பாக்கிச்சூடு சம்பவங்களும் தவிர்க்க முடியாத ஒன்றாக இருந்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த அமெரிக்க அரசு பல்வேறு விதிகளையும், கட்டுப்பாடுகளையும் கொண்டு வந்துள்ளது.
ஏற்கனவே, கடந்த 2012ல் அமெரிக்காவில் 21 வயதுக்குட்பட்டவர்களுக்கு துப்பாக்கிகளை விற்க சுப்ரீம் கோர்ட் தடை விதித்திருந்தது. ஆனால், இந்தத் தீர்ப்பை எதிர்த்து சிலர் மேல்முறையீடு செய்தனர். இது தொடர்பான வழக்கை விசாரித்த கோர்ட், துப்பாக்கி தொடர்பான சட்டங்களை மறுஆய்வு செய்ய அறிவுறுத்தியிருந்தது.
இந்நிலையில், 21 வயதுக்குட்பட்டவர்களுக்கு துப்பாக்கிகளை விற்பது சட்டவிரோதம் என்று அந்நாட்டு பெடரல் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. அமெரிக்காவில் பெருகி வரும் துப்பாக்கிகளுக்கான கட்டுப்பாடுகள், நாட்டின் பாரம்பரிய கலாசாரத்திற்குட்பட்டு இருக்க வேண்டும் என்றும் தீர்ப்பளித்துள்ளது.

