தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/உலகம்/சீன மாணவர்களின் விசாவை ரத்து செய்ய அமெரிக்கா முடிவு

சீன மாணவர்களின் விசாவை ரத்து செய்ய அமெரிக்கா முடிவு

சீன மாணவர்களின் விசாவை ரத்து செய்ய அமெரிக்கா முடிவு


ADDED : மே 29, 2025 08:05 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 29, 2025 08:05 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வாஷிங்டன்: சீனாவைச் சேர்ந்த மாணவர்களின் விசாவை அதிரடியாக ரத்து செய்ய முடிவு செய்துள்ளதாக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் இந்தியாவுக்கு அடுத்தபடியாக சீன மாணவர்கள் தான் அதிகம் பயின்று வருகின்றனர். கடந்த 2023-24ம் ஆண்டு கல்வியாண்டில் மட்டும் சுமார் 2,70,000 சீன மாணவர்கள் அமெரிக்காவில் பயின்று வருகின்றனர். அங்கு பயிலும் வெளிநாட்டு மாணவர்களில் 4ல் ஒரு பங்கு சீன மாணவர்கள் என்னும் அளவுக்கு எண்ணிக்கையில் உள்ளனர்.

இந்த சூழலில், ஹார்வர்டு பல்கலை நிர்வாகத்துடன் அதிபர் டிரம்ப்புக்கு மோதல் போக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், பல்கலைக்கு வழங்கப்படும் நிதியை குறைத்த அவர், அங்கு பயிலும் வெளிநாட்டு மாணவர்கள் சேர்க்கையை நிறுத்தி வைக்க உத்தரவிட்டார். மேலும், வெளிநாட்டு மாணவர்கள் சேர்க்கைக்கான இடஒதுக்கீட்டையும் 25 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக குறைத்தார்.

இந்த நிலையில், சீன கம்யூனிஸ்ட் கட்சியுடன் தொடர்பு கொண்டவர்கள் சீன மாணவர்களுக்கான விசாக்களை ரத்து செய்ய முடிவு செய்துள்ளதாக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ தெரிவித்துள்ளார். மேலும், வெளிநாட்டு மாணவர்களுக்கான விசா நடைமுறைகளை இன்னும் கடினமாக்க பரிசீலனை செய்யுமாறும் அறிவுறுத்தியுள்ளார்.

ஹார்வர்டு பல்கலையின் ஆராய்ச்சி பணிகளில் சிலர், சீன கம்யூனிஸ்ட் கட்சியுடன் ஒருங்கிணைந்து செயல்படுவதாக உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை குற்றம் சாட்டியுள்ளது. மேலும், சீன துணை ராணுவக் குழுவின் உறுப்பினர்களுக்கு பயிற்சி அளிப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனடிப்படையில் டிரம்ப் தலைமையிலான அரசு நிர்வாகம் இந்த முடிவை எடுத்துள்ளதாக மார்கோ ரூபியோ தெரிவித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us