சட்ட விரோதமாக வருபவர்களை திருப்பி அனுப்பும் அமெரிக்கா... 1,60,000 பேர் வெளியேற்றம்
சட்ட விரோதமாக வருபவர்களை திருப்பி அனுப்பும் அமெரிக்கா... 1,60,000 பேர் வெளியேற்றம்
ADDED : அக் 26, 2024 05:49 PM

வாஷிங்டன்: அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியிருந்த ஒரு லட்சத்து 60 ஆயிரம் பேர், இந்தாண்டில் மட்டும் வெளியேற்றப்பட்டுள்ளதாக, உள்நாட்டு பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது.
இது குறித்து அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்புத்துறை மூத்த அதிகாரி கிறிஸ்டி கனெகல்லோ கூறியதாவது:
அமெரிக்க குடியேற்ற சட்டங்கள் கடுமையாக்கப்பட்டு வருகின்றன. இனி அமெரிக்காவில் சட்டத்திற்குப் புறம்பாக யாரும் நுழைய முடியாது. அப்படி குடியேறுபவர்கள், அதனை ஊக்குவிப்பவர்கள் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும். சட்ட விரோதமாக வருபவர்கள், அவரவர் நாட்டுக்கு திருப்பி அனுப்பி வைக்கப்படுவர்.
இந்தாண்டில் அக்டோபர் மாதம் வரை 160,000 பேரை அவரவர் நாடுகளுக்கு திருப்பி அனுப்பி இருக்கிறோம். இந்தியா உள்பட 145க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு 495 விமானங்களை பயன்படுத்தி, திருப்பி அனுப்பியிருக்கிறோம்.
இவ்வாறு கிறிஸ்டி கனெகல்லோ கூறினார்.