கலிபோர்னியாவில் விழுந்து நொறுங்கியது அமெரிக்க எப்-16 போர் விமானம்; பயிற்சியின் போது பரபரப்பு
கலிபோர்னியாவில் விழுந்து நொறுங்கியது அமெரிக்க எப்-16 போர் விமானம்; பயிற்சியின் போது பரபரப்பு
UPDATED : டிச 04, 2025 08:53 AM
ADDED : டிச 04, 2025 08:48 AM

வாஷிங்டன்: அமெரிக்காவின் எப்-16 போர் விமானம் விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக, விமானி உயிர் தப்பினார்.
அமெரிக்க விமானப்படையின் எப்-16 போர் விமானம், பயிற்சியின் போது ட்ரோனா விமான நிலையத்திற்கு அருகே விபத்துக்குள்ளானது. விமானி பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டார். சிறிய காயங்களுக்கு ஆளானார். இந்த விபத்து, தெற்கு கலிபோர்னியா பாலைவனத்தில் நிகழ்ந்திருக்கிறது.
போர் விமானம் கீழே விழுந்து நொறுங்கி தீ பற்றி எரிந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. விமானி பாராசூட் மூலம் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்ட பிறகு, கீழே விழுந்து நொறுங்கும் காட்சிகள் வீடியோவில் இடம் பெற்றுள்ளன. விமானி காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
வான்வெளியில் பயிற்சியின் போது, திடீரென விமானம் கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்து நொறுங்கி உள்ளது. இந்த விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

