sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 28, 2026 ,பங்குனி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

கண்ணிவெடி வைக்கும் 16 படகுகள்; ஹார்முஸ் ஜலசந்தியில் தாக்கி அழித்தது அமெரிக்க படை

/

கண்ணிவெடி வைக்கும் 16 படகுகள்; ஹார்முஸ் ஜலசந்தியில் தாக்கி அழித்தது அமெரிக்க படை

கண்ணிவெடி வைக்கும் 16 படகுகள்; ஹார்முஸ் ஜலசந்தியில் தாக்கி அழித்தது அமெரிக்க படை

கண்ணிவெடி வைக்கும் 16 படகுகள்; ஹார்முஸ் ஜலசந்தியில் தாக்கி அழித்தது அமெரிக்க படை

3


ADDED : மார் 11, 2026 09:15 AM

Google News

3

ADDED : மார் 11, 2026 09:15 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நமது நிருபர்

ஹார்முஸ் ஜல சந்தியில் கண்ணிவெடி வைக்கும் வேலையில் ஈடுபட்ட 16 ஈரான் படகுகள் அழிக்கப்பட்டன என அமெரிக்க படை மத்திய தலைமையகம் தெரிவித்துள்ளது.

மேற்காசிய நாடான ஈரான் மீதான போர் தொடர்கிறது. இந்தப் போரால் ஹார்முஸ் ஜலசந்தி வழியாக நடக்கும் கச்சா எண்ணெய் வினியோகம் தடைப்பட்டுள்ளது. இதனால் கச்சா எண்ணெய் விலை அதிகரித்தது. அதுமட்டுமின்றி காஸ் சிலிண்டர்கள் தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உருவாகி உள்ளது. இந்த சூழலில் ஹார்முஸ் ஜலசந்தியில் கச்சா எண்ணெய் கப்பலை தகர்க்க ஈரான் நடத்திய சதி அம்பலம் ஆகி உள்ளது.

இது தொடர்பாக அமெரிக்க படை மத்திய தலைமையகம் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் ஹார்முஸ் ஜலசந்தியில் கண்ணிவெடி வைக்கும் படகுகளை தாக்கி அழிக்கும் காட்சிகள் இடம் பெற்றுள்ளது. உலகின் 20 சதவீத எண்ணெய் வர்த்தகம் நடைபெறும் முக்கிய கப்பல் பாதையான ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் 16 படகுகளை தாக்கி அழித்து விட்டதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

டிரம்ப் எச்சரிக்கை@



ஈரானுக்கு எச்சரிக்கை விடுத்து அதிபர் டிரம்ப் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: ஈரான் ஹார்முஸ் ஜலசந்தியில் ஏதேனும் கண்ணிவெடிகளை அமைத்திருந்தால், அவற்றை உடனடியாக அகற்ற விரும்புகிறோம். எந்த காரணத்திற்காகவும் கண்ணிவெடிகள் வைக்கப்பட்டு, அவை உடனடியாக அகற்றப்படாவிட்டால், ஈரானுக்கு இதுவரை இல்லாத வகையில் ராணுவ நடவடிக்கைகள் மூலம் கடும் பதிலடி கொடுக்கப்படும். அவர்கள் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்.

கூடுதலாக, ஹார்முஸ் ஜலசந்தியில் சுரங்கம் தோண்ட முயற்சிக்கும் எந்தவொரு படகு அல்லது கப்பலையும் நிரந்தரமாக அழிக்க போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு எதிராக பயன்படுத்தப்படும் அதே தொழில்நுட்பம் மற்றும் ஏவுகணை திறன்களை நாங்கள் பயன்படுத்துகிறோம். கண்ணிவெடி பதிக்கும் படகுகள் அல்லது கப்பல்களை நாங்கள் தாக்கி முற்றிலுமாக அழித்துள்ளோம். இவ்வாறு அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.






      Dinamalar
      Follow us