தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/உலகம்/ தென்கொரியாவுக்கு கூடுதல் வரி விதித்௸த அமெரிக்கா

 தென்கொரியாவுக்கு கூடுதல் வரி விதித்௸த அமெரிக்கா

 தென்கொரியாவுக்கு கூடுதல் வரி விதித்௸த அமெரிக்கா


ADDED : ஜன 28, 2026 04:51 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 28, 2026 04:51 AM


Follow on Google
அ நிறம் | அளவு

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், தென் கொரியாவிற்கான வரியை, 15 சதவீதத்தில் இருந்து 25 சதவீதமாக உயர்த்தியுள்ளார்.

கிழக்காசிய நாடான தென்கொரியா, அமெரிக்காவுடன் கடந்தாண்டு வர்த்தக ஒப்பந்தம் செய்து. ஆனால், இதை அமல்படுத்தவில்லை. இதையடுத்து, அந்நாட்டுக்கு கூடுதல் வரி விதிப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் நேற்று அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக, சமூக வலைதளப் பதிவில் டிரம்ப் கூறியுள்ளதாவது:

ந மக்கு நம்முடைய வர்த்தக ஒப்பந்தங்கள் மிக முக்கியமானவை. ஒவ்வொரு ஒப்பந்தத்திலும் என்ன முடிவாகி உள்ளதோ, அதைப் பொறுத்தே அந்தந்த நாடுகளுக்கான வரிகளை குறைத்து வருகிறோம். இதை நம் வர்த்தக கூட்டாளிகளும் செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

கடந்தாண்டு ஜூலை மாதம், தென் கொரிய அதிபர் லீ ஜே மியுங் உடன் வர்த்தக ஒப்பந்தம் செய்யப்பட்டது. ஆனால் கொரிய பார்லிமென்ட், இன்னும் ஒப்புதல் அளிக்காததால், அதை அமல்படுத்தவில்லை.

இதனால், தென் கொரியாவில் இருந்து வரும் வாகனங்கள், மருத்துவம் சார்ந்த பொருட்கள், மரக்கட்டைகள் போன்வற்றுக்கான வரியை, 15ல் இருந்து, 25 சதவீதமாக உயர்த்தப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us