அமெரிக்க கடற்படை வந்து கொண்டிருக்கிறது : ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை
அமெரிக்க கடற்படை வந்து கொண்டிருக்கிறது : ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை
ADDED : ஜன 28, 2026 07:19 PM

வாஷிங்டன்: மிகப்பெரிய கடற்படை ஈரான் சென்று கொண்டிருக்கிறது, அணு ஆயுதத் திட்டங்களை கைவிட்டு பேச்சுவார்த்தைக்கு வர வேண்டும் என்று ஈரானுக்கு அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் எச்சரித்துள்ளார்.
இது தொடர்பாக டிரம்ப், ட்ரூத் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது:
ஈரான் தனது அணு ஆயுதத் திட்டங்களைக் கைவிட்டு, பேச்சுவார்த்தைக்கு வர வேண்டும். ஈரானை நோக்கி ஒரு மிகப்பெரிய கடற்படை சென்றுகொண்டிருக்கிறது. அந்தப் போர்க்கப்பல் படை முன்னதாக வெனிசுலாவுக்கு அனுப்பப்பட்டதை விடப் பெரியது.
அந்தப் போர்க்கப்பல் படை தேவைப்பட்டால், வேகத்துடன், தனது பணியை விரைவாக நிறைவேற்றத் தயாராக உள்ளது. இனி ஒரு தாக்குதல் நடத்தப்பட்டால் அது முன்னெப்போதையும் விட மிகவும் மோசமானதாக இருக்கும். ஆகவே, அணு ஆயுதங்களைத் தடுப்பதற்கான ஒரு நியாயமான ஒப்பந்தத்தைச் செய்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு டிரம்ப் அந்த பதிவில் கூறியுள்ளார்.
