அமெரிக்க - நைஜீரிய படைகள் தாக்குதல்: ஐ.எஸ்., அமைப்பின் முக்கிய தலைவர் பலி
அமெரிக்க - நைஜீரிய படைகள் தாக்குதல்: ஐ.எஸ்., அமைப்பின் முக்கிய தலைவர் பலி
ADDED : மே 17, 2026 04:17 AM
வாஷிங்டன்: அமெரிக்க -- நைஜீரிய படைகள் இணைந்து நடத்திய கூட்டு ராணுவ நடவடிக்கையில், ஐ.எஸ்., அமைப்பின் முக்கிய தலைவர் நைஜீரியாவில் கொல்லப்பட்டார்.
மேற்கு ஆப்ரிக்க நாடான நைஜீரியாவின் லேக் சாட் என்ற பகுதியில், அமெரிக்க - நைஜீரிய படைகள் இணைந்து நேற்று கூட்டு ராணுவ நடவடிக்கையில் ஈடுபட்டன.
இதில், தடை செய்யப்பட்ட ஐ.எஸ்., அமைப்பின் இரண்டாம் நிலை தலைவரான அபு - பிலால் அல் - மினுகி, 42, கொல்லப்பட்டார். இதை நைஜீரிய அதிபர் போலா டினுபும் உறுதி செய்தார்.
இது குறித்து, அமெரிக்க அதிபர் டிரம்ப் சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவு:
என் வழிகாட்டுதலின் கீழ், அமெரிக்க படையினர் நைஜீரிய படையினருடன் இணைந்து ராணுவ நடவடிக்கையை மேற்கொண்டனர். இதில், ஐ.எஸ்., முக்கிய தலைவர் மினுகி கொல்லப்பட்டார். இனி அவரால் மக்களுக்கு எவ்வித அச்சுறுத்தலும் இருக்காது.
இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.
