தீபாவளி கொண்டாட்டம் துவங்கியாச்சு!: அமெரிக்க அதிபர் முதல் அனைத்து நாடுகளும் தயார்
தீபாவளி கொண்டாட்டம் துவங்கியாச்சு!: அமெரிக்க அதிபர் முதல் அனைத்து நாடுகளும் தயார்
UPDATED : அக் 28, 2024 05:18 PM
ADDED : அக் 28, 2024 11:05 AM

வாஷிங்டன் : இந்தியர்கள் கொண்டாடும் பாரம்பரிய தீபத்திருநாளான தீபாவளி பண்டிகை உலகம் முழுவதும் கோலாகலமாக கொண்டாட துவங்கி இருக்கிறது.
ஆண்டுதோறும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கொண்டாடுவது வழக்கம். இன்று (திங்கள் மாலை ) அமெரிக்க வாழ் இந்தியர்களுடன் இணைந்து வெள்ளை மாளிகையில் தீபம் ஏற்றி தீபாவளியை கொண்டாடுகிறார். இதுவரை இல்லாத அளவிற்கு நியூயார்க் முழுவதும் தீபாவளிக்கு பள்ளிகள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளன.
நெதர்லாந்தில் கொண்டாட்டம்
நெதர்லாந்தில் அமைந்துள்ள Amstelveen என்ற பகுதியில் அனைத்து இந்தியர்களும் ஒன்றுகூடி தீபாவளி திருநாளை மிகவும் விமர்சையாகவும், உற்சாகத்துடனும் (26 ம் தேதி )கொண்டாடினர். அலங்கார மேடையில் நெதர்லாந்தில் குடிபெயர்ந்திருக்கும் அனைத்து மொழி பேசும் இந்தியர்கள் தங்களுடைய மொழியையும், கலாசாரத்தையும் பறைசாற்றும் விதத்தில் மிகவும் அழகாக நடனம் ஆடினர். அது பார்ப்பதற்கு கண்கொள்ளா காட்சியாக இருந்தது. இது கடந்த பதினாறு ஆண்டுகளாக கொண்டாடப்பட்டு வருவதாக தெரிவித்தார்கள்.
அங்கு நிறைய தற்காலிக சிற்றுண்டி கடைகளும், இந்திய தயாரிப்புகளும் விற்பனை செய்யப்பட்டது. எங்களுக்கு வெளிநாட்டில் இது புதியதாக இருந்தது. எங்கு பார்த்தாலும் நம் தென்னிந்திய உறவுகள். நாங்கள் மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தோம். அங்கு விழாவின் நிறைவில் வானவேடிக்கை இடம் பெற்றது கண்கொள்ளா காட்சியாக இருந்தது. நாங்கள் நெதர்லாந்தில் வாழும் என் மகள் குடும்பத்துடனும், அவர்கள் நண்பர்களுடனும் இவ்விழாவில் கலந்து கொண்டது நெகிழ்ச்சியாக இருந்தது.
முரளிதரன் உமாமுரளிதரன் , திருநின்றவூர்.
குவைத்தில் தீபாவளி
குவைத் நகரில் இந்திய சமூகத்தின் சார்பில் தீபாவளி சிறப்பு நிகழ்ச்சி நடந்தது.
இந்த நிகழ்ச்சியில் இந்திய தூதர் ஆதர்ஷ் ஸ்வைகா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். பாரம்பரிய கலை மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகள் நடந்தது. பொதுமக்கள் ஆர்வத்துடன் பங்கேற்று சிறப்பித்தனர்.
--- நமது செய்தியாளர் காஹிலா
ஆக்லாந்தில் தீபாவளி கொண்டாட்டம்
![]() |