"டிரம்ப் அதிபர் ஆனால் இது தான் நடக்கும்": அமெரிக்க அதிபர் ஜோ பைடன்
"டிரம்ப் அதிபர் ஆனால் இது தான் நடக்கும்": அமெரிக்க அதிபர் ஜோ பைடன்
UPDATED : ஜன 06, 2024 08:30 AM
ADDED : ஜன 06, 2024 08:29 AM

வாஷிங்டன்: டிரம்ப் அதிபர் ஆனால் ஜனநாயகத்தை அழித்து விடுவார் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் நவம்பர் 5ம் தேதி நடைபெறுகிறது. தற்போது, அதிபராக இருக்கும் ஜோ பைடனின் பதவிக்காலம் நவம்பர் மாதத்துடன் முடிவடைகிறது.தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் சார்பாக அதிபர் பைடனும், குடியரசுக் கட்சியின் சார்பாகத் டிரம்ப்பும் போட்டியிடுவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தலில் இருவருக்கும் இடையே கடுமையாக போட்டி நிலவும் என கூறப்படுகிறது.
இந்நிலையில் ஜோ பைடன் கூறியிருப்பதாவது: டிரம்ப் அதிபர் ஆனால் ஜனநாயகத்தை அழித்து விடுவார். வரும் நவம்பர் மாதம் நடக்க உள்ள அதிபர் தேர்தல் ஜனநாயகத்தைக் காப்பாற்ற நடத்தப்படும் யுத்தம். டிரம்ப் தனது தேர்தல் பிரசாரத்தில் ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் பேசிவருகிறார். இவ்வாறு ஜோ பைடன் கூறினார்.