ADDED : செப் 23, 2024 04:57 PM

வாஷிங்டன்: '2024ல் வெள்ளை மாளிகைக்குத் திரும்பும் முயற்சியில் தோல்வியுற்றால், 2028ல் மீண்டும் அதிபர் தேர்தலில் போட்டியிடுவேன் என்று நான் நினைக்கவில்லை,' என்று அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்தார்.
அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் நவம்பர் மாதம் 5ம் தேதி நடைபெறுகிறது. இதில் போட்டியிடும் முன்னாள் அதிபர் டிரம்ப் பேட்டி அளித்தார்.அவரிடம் 2028 தேர்தலில் நீங்கள் போட்டியிடுவீர்களா என பத்திரிக்கையாளர் கேள்வி கேட்டார்.
இதற்கு டிரம்ப் பதிலளித்தாவது: இல்லை, நான் போட்டியிடமாட்டேன் என நினைக்கிறேன், அப்படித்தான் இருக்கும். நான் அதிபராக இருந்தபோது உருவாக்கப்பட்ட கோவிட்-19 தடுப்பூசிகளின் வளர்ச்சிக்காக பெருமை அடைகிறேன்.
தடுப்பூசிகள் பற்றிய ஆய்வுகள் மற்றும் அவை பாதுகாப்பானதா என்பதை நாங்கள் கண்டுபிடிக்கப் போகிறோம்.நான் இப்போதும் நல்ல ஆரோக்யத்துடனும், நேரம் தவறாத உணவு பழக்கத்தையும் கடைபிடித்துவருகிறேன் என்றார்.