அமெரிக்க அதிபர் தேர்தல் கருத்துக்கணிப்பு: ட்ரம்பை பின்னுக்கு தள்ளிய கமலா ஹாரிஸ்!
அமெரிக்க அதிபர் தேர்தல் கருத்துக்கணிப்பு: ட்ரம்பை பின்னுக்கு தள்ளிய கமலா ஹாரிஸ்!
ADDED : ஜூலை 26, 2024 08:40 PM

அமெரிக்க அதிபா் தோ்தல் தொடா்பான கருத்துக் கணிப்பில், இந்திய வம்சாவளியைச் சோ்ந்த துணை அதிபா் கமலா ஹாரிஸ் முன்னாள் அதிபா் டொனால்ட் டிரம்ப்பைவிட முன்னிலை பெற்றுள்ளார்.
நவம்பர் 5 ஆம் தேதி நடைபெற உள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளராக முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் போட்டியிடுகிறார்.
டிரம்ப் மீது நடத்தப்பட்ட துப்பாக்கி சூடு சம்பவத்திற்கு பின்னர் கடந்த 19ம் தேதி குடியரசு கட்சியின் தேசிய மாநாடு நடைபெற்று குடியரசு கட்சியின் அதிகாரப்பூர்வ அதிபர் வேட்பாளராக டொனால்டு டிரம்ப் அறிவிக்கப்பட்டார்.
ஜனநாயக கட்சி வேட்பாளராக களமிறங்கிய தற்போதைய அதிபர் ஜோ பைடன் விலகிய நிலையில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ் அக்கட்சி சார்பில் போட்டியிடுகிறார்.
இந்த நிலையில், அமெரிக்க அதிபர் தேர்தல் தொடர்பான கருத்துக் கணிப்பில் கமலா ஹாரிஸ் முன்னாள் அதிபர் டிரம்பைவிட முன்னிலை பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச சந்தை ஆய்வு மற்றும் ஆலோசனை நிறுவனமான இப்ஸோ சுடன் இணைந்து ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் இணைந்து இந்த கருத்துக் கணிப்பை நடத்தியது.
இந்தக் கருத்துக் கணிப்பில், கமலா ஹாரிஸுக்கு 44 சதவீதம் பேரும் டொனால்ட் டிரம்ப்புக்கு 42 சதவீதம் பேரும் ஆதரவு தெரிவித்தனா். இதில் கமலா ஹாரிஸ் கூடுதலாக 2 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளாா்.