குறுகிய கால நிதி மசோவுக்கு அமெரிக்க செனட் சபை ஒப்புதல்; அரசு நிர்வாகம் முடக்கத்தை தடுக்க நடவடிக்கை
குறுகிய கால நிதி மசோவுக்கு அமெரிக்க செனட் சபை ஒப்புதல்; அரசு நிர்வாகம் முடக்கத்தை தடுக்க நடவடிக்கை
UPDATED : ஆக 08, 2026 09:35 PM
ADDED : ஆக 08, 2026 08:13 PM

வாஷிங்டன்: அமெரிக்க பார்லிமென்டுக்கான தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அரசு நிர்வாகத்தின் நிதி முடக்கத்தை தவிர்க்கும் பொருட்டு, குறுகிய கால நிதி மசோதாவுக்கு செனட் சபை ஒப்புதல் அளித்துள்ளது.
அமெரிக்காவில் ஆண்டுதோறும் அரசு செயல்படுவதற்கான நிதி ஒதுக்கீட்டு மசோதா பார்லிமென்டில் நிறைவேற்றப்பட வேண்டும். இம்மசோதா குறித்த நேரத்தில் நிறைவேற்றப்படவில்லை என்றால் அரசு அலுவலகங்களுக்கு பணம் கிடைக்காமல் முடங்கிவிடும். லட்சக்கணக்கான ஊழியர்களின் ஊதியம் தடைபடும்.
வரும் நவ., 3ல் அமெரிக்க பார்லிமென்டுக்கான தேர்தல் நடைபெற உள்ளது. ஆகையால், செப்., 30க்குள் புதிய நிதி மசோதாவை நிறைவேற்ற வேண்டும்.
ஆனால், வழக்கத்துக்கு மாறாக தேர்தல் பிரசார காலத்தில் எவ்வித குழப்பமும் ஏற்படக்கூடாது என்பதற்காக, செனட் சபை அவசரமாக கூடி, தற்போதைய நிதி உதவியை டிச., 11 வரை நீட்டிக்கும் இடைக்கால நிதி மசோதா தாக்கல் செய்யப்பட்டது.
டிரம்ப் நிர்வாகத்தின் சில கொள்கைகளுக்கு முட்டுக்கட்டை போடும் வகையில், எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சி சில நிபந்தனைகளை இம்மசோதாவில் சேர்த்தது. இதற்கு குடியரசு கட்சியினர் ஒப்புதல் அளித்தனர். இதையடுத்து, நிதி மசோதாவுக்கு ஆதரவாக 90 பேரும், எதிராக 6 பேரும் ஓட்டளித்ததை தொடர்ந்து பெரும்பான்மை ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது.
